சென்னை: தவெக தலைவர் விஜய் பிறந்த நாளுக்கு தமாகா(மூ) தலைவர் வாசன், பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தவெக தலைவர் விஜய், தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதை மன்னிட்டு, விஜய்க்கு தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்: தவெக தலைவர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துகள். இன்று பிறந்த நாள் காணும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழக மக்கள் நலன் காக்கும் பணியாற்ற நல்ல உடல் நலத்துடன், நீடுடி வாழ தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தம்பி விஜய் 51-ஆம் பிறந்தநாளை இன்று கொண்டாடும் நிலையில், அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட, நோயில்லா வாழ்வு பெற்று பொதுவாழ்க்கையில் புதிய சாதனைகளை படைக்க வாழ்த்துகிறேன்.
அமமுக தலைவர் டிடிவி தினகரன்: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்புச் சகோதரர் விஜய்க்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். விஜய் நீண்ட ஆயுளோடும் பூரண உடல்நலத்துடனும், மக்கள் பணியை தொடர எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.