Last Updated : 22 Jun, 2025 02:32 PM
Published : 22 Jun 2025 02:32 PM
Last Updated : 22 Jun 2025 02:32 PM

புதுச்சேரி: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஓடும் இரயிலில், யோகா மற்றும் ரோப் யோகா செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டு யோகா விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு யோகா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஓடும் ரயிலில் யோகா மற்றும் ரோப் யோகா செயல் விளக்கம் என்னும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. புதுவை ரயில் நிலையத்திலிருந்து விழுப்புரம் ரயில் நிலையம் வரை சென்ற ரயிலில் இந்த யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ-மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு யோகா விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியை சட்டபேரவை தலைவர் செல்வம் புதுச்சேரி இரயில் நிலையத்திலிருந்து துவக்கி வைத்து யோகாவின் பலன்களை விளக்கி இதில் பங்கெடுத்துக்கொள்ளும் மாணவ- மாணவியர்களையும் பாராட்டினார்.
FOLLOW US
தவறவிடாதீர்!