Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, February 13
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»ஈரான் ராணுவ ட்ரோன் படைப்பிரிவின் முக்கிய தளபதி கொலை: இஸ்ரேல் அறிவிப்பு
    உலகம்

    ஈரான் ராணுவ ட்ரோன் படைப்பிரிவின் முக்கிய தளபதி கொலை: இஸ்ரேல் அறிவிப்பு

    adminBy adminJune 21, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஈரான் ராணுவ ட்ரோன் படைப்பிரிவின் முக்கிய தளபதி கொலை: இஸ்ரேல் அறிவிப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    தெஹ்ரான்: ஈரானின் புரட்சிகர காவல்படை ட்ரோன் படைப் பிரிவின் முக்கிய தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இஸ்ரேலை நோக்கி நூற்றுக்கணக்கான ஆளில்லா ட்ரோன்களை ஏவுவதில் முக்கிய பங்கு வகித்த இந்த தளபதியை கொல்ல இஸ்ரேலிய ராணுவம் போர் விமானங்களைப் பயன்படுத்தின.

    இஸ்ரேல் ராணுவத்தின் அறிக்கையின்படி, ‘ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் மூத்த தளபதி கொல்லப்பட்டுள்ளார். அவரது பெயர் அமின் பௌர் ஜோட்கி. புரட்சிகர காவல்படையின் இரண்டாவது UAV ட்ரோன் படைப்பிரிவின் கமாண்ட் தளபதியாக அவர் பதவி வகித்தார்’ எனத் தெரிவிக்கப்பட்டது. இஸ்ரேல் – ஈரான் போர் தொடங்கிய ஒன்பது நாட்களில் இஸ்ரேலால் கொல்லப்பட்ட 7-வது உயர்மட்ட ஈரானிய தளபதி இவர் ஆவார்.

    ஈரானின் ட்ரோன்கள், இந்த மோதலில் ஒரு முக்கிய பகுதியாக உள்ளது. அவை இஸ்ரேலின் பல பகுதிகளில் கடுமையான சேதத்தை உருவாக்கியுள்ளன. ஈரானின் ட்ரோன்களை கண்டறிந்து, கண்காணிக்கவும் மற்றும் வீழ்த்துவதற்கும் நிறைய ஆயுதங்களையும், ராணுவ வீரர்களையும் இஸ்ரேல் பயன்படுத்தி வருகிறது. தற்போது இரு தரப்பிலும் ஏவுகணைத் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் ஈரான் தளபதி ஒருவர் கொல்லப்பட்டது, அந்த நாட்டுக்கு பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

    உளவாளிகள் 22பேர் கைது: மோதல் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலிய உளவு சேவைகளுடன் தொடர்பு கொண்டிருந்ததாக 22 பேர் கைது செய்யப்பட்டனர் என ஈரான் ஊடகங்கள் தெரிவித்தன. “இஸ்ரேலின் சியோனிச ஆட்சியின் உளவு அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் மற்றும் இஸ்ரேலின் குற்றவியல் ஆட்சியை ஆதரித்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் இதுவரை 22 பேர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர்.” என்று ஈரானின் கோம் மாகாணத்தில் உள்ள காவல் உளவுத்துறையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

    போர் நிறுத்தம் வருமா? – ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தில், ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், இரு நாடுகளும் சண்டையை நிறுத்தி பேச்சுவார்த்தைக்குத் திரும்புமாறு வேண்டுகோள் விடுத்தார். அதேபோல சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தலைவர் ரஃபேல் க்ரோசி, ஈரானின் புஷெர் அணுமின் நிலையம் தாக்கப்பட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து தான் மிகவும் கவலைப்படுவதாக ஐ.நா கவுன்சிலிடம் தெரிவித்தார்.

    ஐ.நா.வுக்கான ஈரானின் தூதர், தனது நாட்டின் அணுசக்தி நிலையங்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் உலகளாவிய அணு ஆயுத பரவல் தடை சட்டத்தின் மீதான முழுமையான தாக்குதல் என்று ஐ.நா கவுன்சிலிடம் தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    ஆல்பர்ட் பைக்கின் கட்டுக்கதை: 19 ஆம் நூற்றாண்டின் ஃப்ரீமேசன் இஸ்லாத்திற்கும் சியோனிசத்திற்கும் இடையிலான 3 ஆம் உலகப் போரை உண்மையில் முன்னறிவித்தாரா? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 12, 2026
    உலகம்

    பயத்திலிருந்து முதல் வீட்டிற்கு: இந்திய வம்சாவளி மருத்துவர் அமெரிக்காவில் தாயின் குடியேறிய வெற்றிப் பயணத்தைப் பகிர்ந்து கொள்கிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 11, 2026
    உலகம்

    பொய்யான வால்மார்ட் கடத்தல் குற்றச்சாட்டில் அமெரிக்காவில் சிறையில் அடைக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் வழக்குத் தாக்கல் செய்தார்: ‘என் வாழ்க்கையின் மிகப்பெரிய தலைவலி’ – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 11, 2026
    உலகம்

    ‘கோ பேக் டு இந்தியா’, ‘டை நாஜி’: மெல்போர்ன் அப்பா காரை சுத்தம் செய்யும் போது இனவெறிக் குறிப்புகளைக் கண்டார்; இத்தகைய தாக்குதல்களுக்கு எந்த காரணமும் இல்லை – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 10, 2026
    உலகம்

    ‘நீங்கள் மருத்துவத்தில் தோல்வியடைந்தீர்கள், மனிதநேயம்’: எப்ஸ்டீனின் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்த மகளிர் மருத்துவ நிபுணர்களை இந்திய வம்சாவளி மருத்துவர் வெடிக்கிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 9, 2026
    உலகம்

    பரபரப்பான டொராண்டோ மாலுக்கு வெளியே இலக்கு வைக்கப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் கொல்லப்பட்டார், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களைப் பற்றி காவல்துறைக்கு துப்பு இல்லை – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இந்தியாவின் முதல் இசை சாலை மும்பையில் திறக்கப்பட்டது; வாகனங்கள் கடந்து செல்லும் போது ‘ஜெய் ஹோ’ இசைக்கிறது – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இவை உலகின் மிகக் குறுகிய குடியிருப்பு கட்டிடங்கள்: மெல்லிய ஆனால் சின்னமானவை
    • விலங்குகளால் ஆளப்படும் 7 தீவுகள்: பன்றிகள் மற்றும் பூனைகள் முதல் குரங்குகள் மற்றும் கொடிய பாம்புகள் வரை | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • உலகின் அமைதியான அறை: மைக்ரோசாப்டின் அமைதியான அறைக்குள் உங்கள் இதயத் துடிப்பை நீங்களே கேட்கலாம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சாதாரண வீட்டுப் பல்லிகளைப் போல் பல்லிகள் மீண்டும் வால்களை வளர்வதை கண்காணிக்க முடியும்; விஞ்ஞானம் சொல்வது இதோ | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.