Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, April 13
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ஆம் ஆத்மி ஆட்சியின்போது வகுப்பறைகள் கட்டியதில் ரூ.2,000 கோடி ஊழல்: அமலாக்கத் துறை தீவிர விசாரணை
    தேசியம்

    ஆம் ஆத்மி ஆட்சியின்போது வகுப்பறைகள் கட்டியதில் ரூ.2,000 கோடி ஊழல்: அமலாக்கத் துறை தீவிர விசாரணை

    adminBy adminJune 21, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஆம் ஆத்மி ஆட்சியின்போது வகுப்பறைகள் கட்டியதில் ரூ.2,000 கோடி ஊழல்: அமலாக்கத் துறை தீவிர விசாரணை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஆம் ஆத்மி ஆட்சியின்போது டெல்லியில் வகுப்பறைகள் கட்டியதில் ரூ.2,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத் துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

    டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடத்தியபோது 12,748 வகுப்பறைகள் கட்டப்பட்டன. இதுதொடர்பாக டெல்லி ஊழல் தடுப்புப் பிரிவு அண்மையில் விசாரணை நடத்தியது. அப்போது வகுப்பறைகள் கட்டியதில் ரூ.2,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பது தெரியவந்தது. இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில் ஊழலில் தொடர்புடைய 322 வங்கிக் கணக்குகள் கண்டறியப்பட்டு உள்ளன.

    வகுப்பறை ஊழல் குறித்து அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை டெல்லி முழுவதும் 12,748 வகுப்பறைகள் கட்டப்பட்டன. ரூ.5 லட்சத்தில் ஒரு வகுப்பறையை கட்ட முடியும். ஆனால் ஆம் ஆத்மி அரசு ஒரு வகுப்பறைக்கு ரூ.24.86 லட்சத்தை செலவு செய்ததாக கணக்கு காட்டியிருக்கிறது. மேலும் 1,214 கழிப்பறைகளை, வகுப்பறைகளாக கணக்கு காட்டி உள்ளனர். இதுபோல பல்வேறு வகைகளில் மோசடிகள் நடைபெற்று உள்ளன. ஒட்டுமொத்தமாக ரூ.2,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருக்கிறது.

    முன்னாள் முதல்வர் கேஜ்ரிவாலின் ஆட்சிக் காலத்தில் வகுப்பறைகள் கட்ட 34 நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த நிறுவனங்கள் அனைத்தும் ஆம் ஆத்மியின் பினாமிகள் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    வகுப்பறை ஊழல் விவகாரம் தொடர்பாக முன்னாள் கல்வி அமைச்சர் மணீஷ் சிசோடியா, முன்னாள் பொதுப் பணித் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் உள்ளிட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    கடந்த பிப்ரவரியில் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. புதிய முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றார். புதிய அரசு பதவியேற்ற பிறகு கடந்த ஆம் ஆத்மி அரசின் பல்வேறு ஊழல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ‘மோடியை பழிப்பது சுலபம்; ஆனால்…’ – ராகுலை விமர்சித்த ஆச்சாரிய பிரமோத் கிருஷ்ணம்

    December 3, 2025
    தேசியம்

    “அடுத்து மேற்கு வங்கத்திலும் காட்டாட்சியை அகற்றுவோம்” – பிரதமர் மோடி உறுதி

    December 3, 2025
    தேசியம்

    பிஹாரில் தனித்து போட்டியிட்ட ஒவைசி கட்சி 5 இடங்களில் வெற்றி

    December 3, 2025
    தேசியம்

    பிஹார் பெண்களின் ஞானமே என்டிஏ வெற்றிக்கு காரணம்: பாஜக மூத்த தலைவர் விளக்கம்

    December 3, 2025
    தேசியம்

    டெல்லி கார் குண்டுவெடிப்பு: புல்வாமாவில் மருத்துவர் உமர் நபியின் வீடு இடிப்பு

    December 3, 2025
    தேசியம்

    ‘பரகாமணி’ திருட்டு வழக்கில் குற்றவாளியை பிடித்த தேவஸ்தான முன்னாள் பாதுகாப்பு அதிகாரி மர்ம சாவு: போலீஸார் விசாரணை

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அபிஷேக் ஷர்மாவின் கோடிகள் மதிப்புள்ள சண்டிகர் வீடு, குடும்ப வசதி, அவரது உயரும் கிரிக்கெட் வாழ்க்கை மற்றும் அழகான பூஜை அறை ஆகியவற்றின் சரணாலயமாகும்.
    • மேற்கு இந்தியாவில் உள்ள 5 நகரங்கள் 2026ல் ரியல் எஸ்டேட் வளர்ச்சியை சந்திக்கின்றன
    • மெக்டொனால்டின் பர்கர்கள் ஏன் அழுகவில்லை: உண்மையான காரணம் எந்த இரசாயனமும் இல்லை | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • முதல் பதிவுகளை அழிக்கும் 10 விஷயங்கள்- அவற்றை எவ்வாறு சரிசெய்வது
    • உங்கள் திருமணத்தை சேதப்படுத்தும் 5 நகைச்சுவைகள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • April 2026
    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.