சென்னை: உலக அகதிகள் தினம் அனுசரிக்கப்படும் நிலையில் அகதிகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “பொல்லாத போர்களின் மோசமான விளைவே நாடற்ற மனிதர்கள். மனிதத்தைக் கொல்லும் போர்களால் வாழ்விழந்து ஏதிலிகளாய் புலம்பெயர்ந்தவர்களை அன்பால் அரவணைப்போம்.
நமது திராவிடமாடலில் “அகதிகள் முகாம்” என்பதை “மறுவாழ்வு முகாம்” எனப் பெயர் மாற்றி, அன்னைத் தமிழ் உறவுகளின் மாண்பைப் போற்றினோம்! வாழ்வாதாரத்தையும் வாழ்வுரிமையையும் பாதுகாக்கிறோம். போரை மாய்ப்போம்! மனிதம் காப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.