Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, February 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»பயங்கரவாத எதிர்ப்பு, வர்த்தகம் குறித்து ட்ரம்ப் உடன் பேச்சு நடத்திய பாகிஸ்தான் ராணுவ தளபதி
    உலகம்

    பயங்கரவாத எதிர்ப்பு, வர்த்தகம் குறித்து ட்ரம்ப் உடன் பேச்சு நடத்திய பாகிஸ்தான் ராணுவ தளபதி

    adminBy adminJune 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பயங்கரவாத எதிர்ப்பு, வர்த்தகம் குறித்து ட்ரம்ப் உடன் பேச்சு நடத்திய பாகிஸ்தான் ராணுவ தளபதி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    இஸ்லாமாபாத்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உடன் வாஷிங்டனில் நடந்த “இனிமையான” சந்திப்பின் போது, ​​பயங்கரவாத எதிர்ப்பு, இருதரப்பு வர்த்தகத்தை விரிவுபடுத்துவது ஆகியவை குறித்து ராணுவத் தலைமைத் தளபதி சையத் அசிம் முனிர் விவாதித்ததாக பாகிஸ்தான் ராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

    இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை அடுத்து அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் ராணுவத் தளபதி சையத் அசிம் முனிர், வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பைச் சந்தித்தார். அதிபர் ட்ரம்ப், அசிம் முனிருக்கு மதிய விருந்தளித்தார். இந்த விருந்தில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான சிறப்பு பிரதிநிதி ஸ்டீவ் விட்காஃப், பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் உளவுத்துறை தலைவருமான லெப்டினன்ட் ஜெனரல் முகமது அசிம் மாலிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பதவியில் இருக்கும் அமெரிக்க அதிபரை நேரில் சந்தித்த முதல் ராணுவத் தளபதி எனும் சிறப்பை அசிம் முனிர் பெற்றுள்ளார். அரசியல் பதவியை வகிக்காமல், ராணுவச் சட்டத்தின் கீழ் ஆட்சி செய்யாமல் பணியாற்றும் பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஒருவருக்கு விருந்தளித்த முதல் அமெரிக்க அதிபர் எனும் பெயரை டொனால்டு ட்ரம்ப் பெற்றுள்ளார்.

    இந்தச் சந்திப்பு தொடர்பாக பாகிஸ்தான் ராணுவ ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தச் சந்திப்பு ஆரம்பத்தில் ஒரு மணி நேரத்துக்கு திட்டமிடப்பட்டிருந்தாலும், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இது உரையாடலின் ஆழத்தையும் நல்லிணக்கத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்தச் சந்திப்பின்போது, அதிபர் ட்ரம்ப், பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான பாகிஸ்தானின் தொடர்ச்சியான முயற்சிகளைப் பாராட்டினார். மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பைப் பாராட்டினார். பயங்கரவாத எதிர்ப்பில் தொடர்ந்து ஒத்துழைப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

    வர்த்தகம், பொருளாதார மேம்பாடு, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள், செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி, கிரிப்டோ கரன்சி மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஒருங்கிணைப்பு மற்றும் பகிரப்பட்ட நலன்களின் அடிப்படையில் பாகிஸ்தானுடன் பரஸ்பர நன்மை பயக்கும் வர்த்தக கூட்டாண்மையை உருவாக்குவதில் அதிபர் ட்ரம்ப் மிகுந்த ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.

    சிக்கலான பிராந்திய காலக்கட்டத்தில் சையத் அசிம் முனிர், தலைமைத்துவத்தையும் தீர்க்கமான தன்மையையும் வெளிப்படுத்தியதாக அமெரிக்க அதிபர் பாராட்டினார். பரஸ்பரம் வசதியான தேதியில் பாகிஸ்தானுக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொள்ள அரசாங்கத்தின் சார்பாக ட்ரம்ப்புக்கு ராணுவத் தலைவர் அழைப்பு விடுத்தார். இது இருதரப்பு உறவுகளின் அரவணைப்பை பிரதிபலிக்கும் ஒரு குறியீடு ஆகும்.

    பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே போர் நிறுத்தத்தை எளிதாக்குவதில் ஆக்கபூர்வமாக பங்களிப்பு செய்த ட்ரம்ப்புக்கு, பாகிஸ்தான் அரசாங்கம் மற்றும் மக்களின் சார்பில் சையத் அசிம் முனிர் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

    ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றங்கள் குறித்து விரிவான கருத்துப் பரிமாற்றம் நடந்தது. மோதலைத் தீர்ப்பதன் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தினர். இந்தச் சந்திப்பு, பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நீண்டகால கூட்டாண்மையை வலுப்படுத்தும் தொடர் முயற்சிகளில் ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தைக் குறிக்கிறது. அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றின் பகிரப்பட்ட நோக்கங்களின் அடிப்படையில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    ஜெஃப்ரி எப்ஸ்டீன் தனது காபியை எப்படி தயாரிக்கிறார் என்பதை DOJ கோப்புகள் வெளிப்படுத்துகின்றன, முழு படிப்படியான வழிகாட்டி உள்ளே | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 13, 2026
    உலகம்

    ஆல்பர்ட் பைக்கின் கட்டுக்கதை: 19 ஆம் நூற்றாண்டின் ஃப்ரீமேசன் இஸ்லாத்திற்கும் சியோனிசத்திற்கும் இடையிலான 3 ஆம் உலகப் போரை உண்மையில் முன்னறிவித்தாரா? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 12, 2026
    உலகம்

    பயத்திலிருந்து முதல் வீட்டிற்கு: இந்திய வம்சாவளி மருத்துவர் அமெரிக்காவில் தாயின் குடியேறிய வெற்றிப் பயணத்தைப் பகிர்ந்து கொள்கிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 11, 2026
    உலகம்

    பொய்யான வால்மார்ட் கடத்தல் குற்றச்சாட்டில் அமெரிக்காவில் சிறையில் அடைக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் வழக்குத் தாக்கல் செய்தார்: ‘என் வாழ்க்கையின் மிகப்பெரிய தலைவலி’ – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 11, 2026
    உலகம்

    ‘கோ பேக் டு இந்தியா’, ‘டை நாஜி’: மெல்போர்ன் அப்பா காரை சுத்தம் செய்யும் போது இனவெறிக் குறிப்புகளைக் கண்டார்; இத்தகைய தாக்குதல்களுக்கு எந்த காரணமும் இல்லை – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 10, 2026
    உலகம்

    ‘நீங்கள் மருத்துவத்தில் தோல்வியடைந்தீர்கள், மனிதநேயம்’: எப்ஸ்டீனின் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்த மகளிர் மருத்துவ நிபுணர்களை இந்திய வம்சாவளி மருத்துவர் வெடிக்கிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸின் மேற்கோள்: “நமக்குத் தெரிந்ததை நாம் அறிவோம், நமக்குத் தெரியாததை நாம் அறியவில்லை என்பதை அறிவதுதான் உண்மையான அறிவு.” | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சில நொடிகளில் காணாமல் போன பாம்பை உங்கள் தோட்டத்தில் கண்டதாக நினைக்கிறீர்களா? இந்த பாம்பு போன்ற உயிரினம் நீங்கள் நினைப்பது இல்லை | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்த பெண் 2017 இல் இறந்த தனது கணவரிடமிருந்து காதலர் பூக்களைப் பெறுகிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஒற்றையர்களுக்கான காதலர் தின 2026 செய்திகள்: 100+ மேற்கோள்கள், நிலைகள் மற்றும் வேடிக்கையான, நகைச்சுவையான மற்றும் ஆழமான WhatsApp செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • காதலர் தின வாழ்த்துக்கள் 2026: 51 காதலி, காதலன், கணவன் மற்றும் மனைவிக்கான சிறந்த காதலர் தின வாழ்த்துகள் மற்றும் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.