Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»வலுக்கும் இஸ்ரேல் – ஈரான் போர்: மகனின் திருமணத்தை ஒத்திவைத்த நெதன்யாகு
    உலகம்

    வலுக்கும் இஸ்ரேல் – ஈரான் போர்: மகனின் திருமணத்தை ஒத்திவைத்த நெதன்யாகு

    adminBy adminJune 16, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    வலுக்கும் இஸ்ரேல் – ஈரான் போர்: மகனின் திருமணத்தை ஒத்திவைத்த நெதன்யாகு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    டெல் அவிவ்: ஈரானுடனான மோதல் அதிகரித்து வருவதால், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது மகனின் திருமணத்தை ஒத்திவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இஸ்ரேல் – ஈரான் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரு​கிறது. இஸ்ரேல் தாக்​குதலில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அணுசக்தி தலைமையகம் தீக்கிரையானது. எண்ணெய் வயல்​கள் நாசமாகின. இதுவரை 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஈரான் நடத்திய பதில் தாக்குதலில், இஸ்ரேலில் 13 பேர் உயிரிழந்தனர். இரு தரப்பிலும் நூற்றுக்கணக்கானோர் படுகா​யம் அடைந்தனர்.

    இந்த நிலையில், நெதன்யாகுவின் மகன் அவ்னர் நெதன்யாகுவுக்கு, அமித் யார்தேனி என்ற பெண்ணுடன் இன்று (ஜூன் 16) திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் இஸ்ரேலிய பணயக்கைதிகள் இன்னும் காசாவில் சிறை வைக்கப்பட்டுள்ள நிலையிலும், இஸ்ரேல் – ஈரான் சண்டை தீவிரமடைந்து வரும் நிலையிலும் நெதன்யாகு குடும்பத்தினர் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதாக இஸ்ரேல் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் விமர்சனம் செய்ததால், தனது மகனின் திருமணத்தை நெதன்யாகு ஒத்திவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    திருமண கொண்டாட்டங்களுக்கு நெதன்யாகு குடும்பம் தயாராகி வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஈரானின் அணுசக்தி தளங்கள், ராணுவ முகாம்கள், ஏவுகணை தளங்களை குறிவைத்து ஒரு மிகப்பெரிய தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை ஏவியது. இதனால் இஸ்ரேலில் நாடு தழுவிய அவசரநிலை அமல்படுத்தப்பட்டது. பெரும்பாலான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    இஸ்ரேல் – ஈரான் தாக்குதலுக்கு முன்பே, அவ்னர் நெதன்யாகுவின் திருமணம் இஸ்ரேலில் ஏற்கனவே சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்தது. டெல் அவிவ் நகரின் வடக்கே உள்ள கிப்புட்ஸ் யாகுமில் திருமண அரங்குக்கு அருகே சில அரசாங்க எதிர்ப்பு அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்திருந்தன.

    திருமண நிகழ்வு நடக்கும் இடத்தை சுற்றி இஸ்ரேல் காவல்துறையினர் 100 மீட்டர் சுற்றளவில் இரும்பு சாலைத் தடுப்புகள் மற்றும் முள்வேலிகளை அமைத்துள்ளனர். மேலும், இந்த வார தொடக்கத்தில், போலீஸ் ஹெலிகாப்டர்களை தவிர, மைதானத்தின் 1.5 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள வான்வெளி மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது மகனின் திருமணத்தை ஒத்திவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    சிறுகோள்களில் உலோகங்கள்

    June 30, 2025
    உலகம்

    ‘கடவுளின் எதிரிகள் பழிவாங்கப்படுவார்கள்’ – ட்ரம்ப், நெதன்யாகுவை கடுமையாக சாடும் ஈரான் மதகுரு

    June 30, 2025
    உலகம்

    ஈரானால் சில மாதங்களிலேயே யுரேனியம் செறிவூட்டலை தொடங்கமுடியும்: சர்வதேச அணுசக்தி முகமை தலைவர்

    June 30, 2025
    உலகம்

    பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும்: ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ட்ரம்ப் வலியுறுத்தல்

    June 30, 2025
    உலகம்

    வசிரிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதலுக்கு வழக்கம் போல் இந்தியா மீது குற்றம் சுமத்துகிறது பாகிஸ்தான்

    June 30, 2025
    உலகம்

    477 ட்ரோன்கள், 60 ஏவுகணைகள் – உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய வான்வழித் தாக்குதல்!

    June 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பூவை ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு!
    • ஒரு நாய் கடித்த பிறகு என்ன செய்ய வேண்டும்: நீங்கள் பின்பற்றக்கூடிய அத்தியாவசிய உதவிக்குறிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • செல்லாத பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித் தர கோரி கோவை ஆட்சியர் அலுவலகம் வந்த மூதாட்டி!
    • பெண்களால் கட்டப்பட்ட இந்தியாவில் பிரபலமான நினைவுச்சின்னங்கள்; சில யுனெஸ்கோ பாரம்பரிய தளங்கள்
    • பாலா ஹீரோவாக அறிமுகமாகும் ‘காந்தி கண்ணாடி’  – ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.