Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, January 10
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»டிஎன்​பிஎஸ்சி குரூப் 1 முதல்​நிலைத் தேர்வு: எளிய வினாக்​கள், ஏராளமான பிழைகள்!
    கல்வி

    டிஎன்​பிஎஸ்சி குரூப் 1 முதல்​நிலைத் தேர்வு: எளிய வினாக்​கள், ஏராளமான பிழைகள்!

    adminBy adminJune 16, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    டிஎன்​பிஎஸ்சி குரூப் 1 முதல்​நிலைத் தேர்வு: எளிய வினாக்​கள், ஏராளமான பிழைகள்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    எப்​போதும் போல டிஎன்​பிஎஸ்சி தேர்வு மிக நேர்த்​தி​யாக நடந்து முடிந்​துள்​ளது. தேர்​வு​களைத் திறம்பட நடத்​து​வ​தில் தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யத்​தின் நிபுணத்​து​வம் மீண்​டும் ஐயமற நிரூபிக்​கப்​பட்டு இருக்​கிறது. ஆணை​யத்​துக்கு நெஞ்​சார்ந்த வாழ்த்​துகள். 200 கேள்வி​கள் 300 மதிப்​பெண்​கள்.

    கால அவகாசம் 3 மணி நேரம். எளி​தாக்​கப்​பட்ட விடைத்​தாள். எல்​லாம் சரி​தான்; ஆனால், டிஎன்​பிஎஸ்சியின் கடந்த சில தேர்​வு​களில் நாம் கண்ட சுவாரஸ்​ய​மான புத்​தி​சாலித்​தனம், மன்​னிக்​க​வும், இந்த முறை தென்​படவே இல்​லை. இது​கூடப் பரவா​யில்​லை; ஏராள​மான முரண்​கள், பிழைகள் – கேள்​வித்​தாள் முழுதும் நிரவிக் கிடக்​கின்​றன. ஒரு​வகை​யில் இது நமக்கு மிகப்​பெரிய ஏமாற்​றம், அதிர்ச்​சி. மிகுந்த அனுபவம் மிக்க தேர்​வாணை​யம் எப்​படி கவனிக்​காமல் விட்​டது…?

    இது குறித்து விரி​வாகப் பார்ப்​போம். அதற்கு முன்​னர் – ‘கேள்​வித்​தாள், எப்​படி’..? அநேக​மாக எல்​லாப் பகு​தி​களி​லும் ‘நேரடி வினாக்​கள்’ மட்​டுமே இருந்​தன. அதனால், முறை​யாகத் தேர்​வுக்​குத் தயா​ராகிச் சென்​றவர்​கள், மிக நிச்​சய​மாகத் தேர்ச்சி பெறு​வார்​கள். நம்​பிக்​கை​யுடன் இருக்​கலாம்.

    கணிதம், அறி​வியல், வரலாறு, சுற்​றுச்​சூழல், பொருளா​தா​ரம், அரசமைப்பு சட்​டம், மத்​திய மாநில அரசுத் திட்​டங்​கள், இலக்​கி​யம் குறிப்​பாக திருக்​குறள் என்​று, அறியப்​பட்ட/ அறிவிக்​கப்​பட்ட பாடத்​திட்​டத்​தில் இருந்து சற்​றும் நழு​விச் செல்​லாத கேள்வி​களே இடம் பெற்று இருந்​த​தால் ‘நுண்​ணறி​வு’க்கு வேலை​யில்​லாமல் போய்​விட்​டது.

    அறி​வியல் பகு​தி​யில் மருத்​துவ அறி​வுக்கு முக்​கி​யத்​து​வம் தரப்​பட்​டிருப்​பது ஒரு வகை​யில் ஆரோக்​கிய​மான நன்​முயற்​சி. உயிர் வேதி​யியல் ஆக்​சிஜன், பச்​ச​யம், பூகம்ப விளைவு, வன வகைகள் குறித்த கேள்வி​கள் தேர்​வர்​களுக்கு எளிமை​யாக இருந்​திருக்​கும். நோபல் பரிசு யாருக்கு வழங்​கப்​பட்​டது என்று இல்​லாமல், இவர்​களுக்கு எந்த கண்​டு​பிடிப்​புக்​காக நோபல் பரிசு தரப்​பட்​டது? என்று வின​வியமை பாராட்​டுக்கு உரியது. பொதுக் கணிதத்​தில் அநேக​மாக எல்​லாக் கேள்வி​களுமே பள்​ளிப் பாடப் புத்​தகத்​தில் இருந்து நேரடி​யாக எடுக்​கப்​பட்​டவை ஆகவே இருந்​தன.

    ரெப்போ வட்டி விகிதம், நாட்​டின் வளர்ச்சி உட்​கட்​டமைப்பு வசதி​கள் என்று வழக்​க​மான பாதை​யிலேயே பொருளா​தா​ரம் பயணித்​தது. இந்​திய, தமிழக அரசி​யல் பகு​தி​யில் புதி​தாக எது​வும் இல்​லை. சுதந்​திரப் போராட்ட காலம் கணிச​மாக இடம்​பெற்​றுள்​ளது. ஒரு குறிப்​பிட்ட அரசி​யல் இயக்​கம்/ தலை​வர் குறித்த கேள்வி​கள், வழக்​கத்தை விட​வும் மிக அதி​க​மாய் இருந்​தன. டிஎன்​பிஎஸ்சி கேள்​வித் தயாரிப்​பில் கடந்த சில ஆண்​டு​களில் நாம் காணாத அளவுக்கு ஒரு தலைப்​பட்ச அரசி​யல் நெடி தூக்​கலாகவே இருந்​தது. தவிர்த்து இருக்​கலாம். ஒரு​வேளை, தவிர்க்க முடி​யாதோ..?

    மத்​திய மாநில அரசின் திட்​டங்​கள் குறித்த கேள்வி​களும் மிக அதி​கம். மத்​திய அரசின் குறிப்​பிடத்​தக்க திட்​டங்​களில் பெரும்​பாலானவை இடம் பெற்று விட்​டன! திருக்​குறள் சார்ந்த வினாக்​களில் இன்​னும் ஆழம் இருந்​திருக்​கலாம். மேலோட்​ட​மாய் அமைந்​த​தாய் ஓர் உணர்வு எழத்​தான் செய்​கிறது. தமிழ்த் தேவர்​களுக்​குத் திருக்​குறளில் இவ்​வளவு தெரிந்​திருந்​தால் போதும் என்​கிற அணுகு​முறை சரி​யான​தா…? திருக்​குறளில் மிக​வும் உயிரோட்​ட​மான பகு​தி​களுக்கா பஞ்​சம்​..? ஆணை​யம் சற்றே சிந்​திக்​கலாம். இது​வேனும் பரவா​யில்​லை; ஆங்​காங்கே தென்​படு​கிற முரண்​கள், பிழைகள், தவறான மொழி​யாக்​கம்​… திணறடிக்​கின்​றன.

    ஏராள​மாக இருக்​கின்​றன; ஒரு சில மட்​டும் பார்ப்​போம். ‘தி​முக மக்​களைத் தமிழர் என்ற அடை​யாளத்​தால் ஒன்​றிணைய வற்​புறுத்​தி​யது’. ஆங்​கிலத்​தில் இப்​படி இருக்​கிறது: It urged people to WRITE under Tamil identity. வேறொன்​றுமில்​லை, Unite என்​பது​தான் write என்று அச்​சாகி உள்​ளது.

    கேள்​வித்​தாளை ஒரு​முறையேனும் சரி​பார்க்க வேண்​டா​மா…? (நான் பார்த்த தாளில், கேள்வி எண் 121) மற்​றொரு கேள்​வி​யில் ‘The union executive consists of…’ தமிழில் இவ்​வாறு தரப்​பட்​டுள்​ளது – ‘மத்​திய செய​லாட்​சித் துறை​யின் பகு​தி​யாக இருப்​பது..’ சாசனத்​தில் வரும் Article என்​கிற சொல்​லுக்கு ஒரே கேள்​வித்​தாளில் வெவ்​வேறு இடங்​களில் ‘சரத்​து’, உறுப்​பு, விதி, பிரிவு என்று வெவ்​வேறு சொற்​கள் பயன்​படுத்​தப்​பட்டு உள்​ளன.

    ஏன் இந்​தக் குழப்​பம்​..? சாசனத்​தில் உள்ள ஒரு சொல்​லில் கூட ‘சீர்​மை’ (uniformity) இல்​லாமற் போனது ஏன்​..? சட்​டத்​தில், சாசனத்​தில்​அடிக்​கடி பயன்​படுத்​தப்​படும் சாதாரண சொற்​கள் கூட அதி​காரப்பூர்வ மொழி​யாக்​கத்​துக்கு உட்​ப​டாதது ஏன்​..? அரசுத் தேர்​வாணை​யம் இதனை இன்​னும் தீவிரத்​துடன் பரிசீலிக்க வேண்​டும்.

    சுயமரி​யாதைத் திரு​மணத்​தின் சிறப்பு அம்​சங்​களில் ஒன்​றாக கேள்​வித்​தாள் குறிப்​பிடு​கிறது – ‘அவை பெரும்​பாலும் வேண்​டுமென்றே மங்​களகர​மான​தாகக் கருதப்​படும் நேரங்​களில் நடத்​தப்​பட்​டன’. இதற்கு மாறாக, ‘மங்​களகரம் அல்​லாத நேரங்​களில் நடத்​தப்​பட்​டன’ என்றே அமைந்து இருக்க வேண்​டும். ஆங்​கிலத்​தில் ‘auspicious’ என்று தவறு​தலாக உள்​ளதை அப்​படியே தமிழில் மொழிபெயர்த்து இருக்​கின்​றனர்!பல இடங்​களில் தமிழ் மொழி​யாக்​கம், ‘கரிம தீவிரம்’ ‘நி​திஒழுக்​கம்’ என்​றெல்​லாம் மிக​வும் இறுக்​க​மாக இருந்​தது.

    அதேசம​யம், காக்​கைகளுக்கு ‘நைவேத்​யம்’ செய்​யும் வழக்​கம் என்​றும் குறிப்​பிடு​கிறார்​கள். ‘படையல்’ என்​றால் எல்​லாருக்​கும் புரி​யுமே… ‘பட்​ஜெட்’ என்​றால் நிதி​நிலை அறிக்​கை. இதனை, ‘வரவு செலவு திட்ட அறிக்​கை’ என்​கிறது கேள்​வித்​தாள். இதை​விட​வும் வேடிக்​கை, ‘₹’ என்​பதை நீக்​கி, ‘ரூ’ என்​கிற தமிழ் எழுத்​து, ‘பட்​ஜெட்​’டில் பயன்​படுத்​தப் பட்​டது என்று பெரு​மை​யுடன் கூறுகிறது! ‘துறை​கள்’ என்று பன்​மை​யில் தொடங்​கி, ‘பார்க்​கப்​படு​கிறது’ என்று ஒரு​மை​யில் முடிகிறது.

    ‘பெண்​கள் உதவி எண்’, பொது விநி​யோக முறை குறித்த வினாக்​கள்​… யாராலும் இதை​விட மோச​மாக வடிவ​மைக்க முடி​யாது. பொது விநி​யோக முறை பற்​றிய கேள்வி ஆங்​கிலத்​தி​லும் தாறு​மாறாகத்​தான் இருக்​கிறது. இத்​தகைய முரண்​கள், பிழைகள் மலிந்து கிடக்​கின்​றன.

    யாரேனும் ஒரு​வர் சில மணித்​துளி​கள் செல​விட்டு இருந்​தா​லும் இந்​தப் பிழைகளை களைந்​திருக்க முடி​யும். ஒரு​வேளை இவையெல்​லாம் பிழைகள் என்​ப​தையே அறிய​வில்​லை​யோ..? நிறை​வாக, அத்​தனை ‘சு​வாரஸ்​யம்’ இல்லை என்​றாலும், இந்த எளிய கேள்வி நன்​றாகவே இருக்​கிறது: மேரி என்​பவரின் தற்​போதைய வயது 16. அவள் தனது தம்​பி​யின் வயதை விட நான்கு மடங்கு பெரிய​வள் எனில் அவள் தனது தம்​பி​யின் வயதை விட இரண்டு மடங்கு அதி​க​மாக பெரிய​வளாக இருக்​கும்​போது மேரி​யின்​ வயது என்​ன..? a) 20 b) 24 c) 28 d) 32 e) ​விடை தெரிய​வில்​லை.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    மாணவர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் 2,000 பேருக்கு டேட்டா சயின்ஸ் பயிற்சி: சென்னை ஐஐடி சிறப்பு திட்டம்

    December 3, 2025
    கல்வி

    விடுமுறை நாட்களில் தேர்வுப் பணி; மாற்று விடுப்பு வழங்க ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

    December 3, 2025
    கல்வி

    நாளை முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு: தேர்வை தள்ளிவைக்க உயர் நீதிமன்றம் மறுப்பு 

    December 3, 2025
    கல்வி

    இளம் வயதிலேயே ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும்: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலை. துணைவேந்தர் அறிவுறுத்தல்

    December 3, 2025
    கல்வி

    950 மையங்​களில் தமிழ் இலக்கியத் திறனறி தேர்வு: 2.70 லட்சம் பிளஸ் 1 மாணவர்கள் பங்கேற்பு 

    December 3, 2025
    கல்வி

    பள்ளி வாகனங்கள் மூலம் படிப்பை வசமாக்கிய பழங்குடியினர் நலத்துறை!

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • உங்கள் குழந்தை தொடர்ந்து கோக் கேட்கிறது என்று கவலைப்படுகிறீர்களா? ஷாலினி பாஸி ஒரு புத்திசாலித்தனமான பெற்றோருக்குரிய ஹேக்கைப் பகிர்ந்துள்ளார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்த எளிய தந்திரங்களை பயன்படுத்தி இந்த குளிர்காலத்தில் உங்கள் வீட்டை ஹீட்டர் இல்லாமல் சூடாக வைத்திருப்பது எப்படி | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • வரலாற்றில் ஜனவரி 10 அன்று என்ன நடந்தது: ஆண்டுகளில் மிக முக்கியமான நிகழ்வுகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்திய பயண பதிவர் ‘ஐரோப்பாவின் மறுபக்கத்தை’ அம்பலப்படுத்துகிறார், பயணங்களை கவனமாக திட்டமிடுமாறு மக்களுக்கு அறிவுறுத்துகிறார்; ‘ஒரு காலத்தில் பழமையானதாக உணர்ந்த பகுதிகள் இப்போது அழுக்காகவும், குழப்பமாகவும், சில சமயங்களில்…’ – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘கில்லர் கிறிஸ்டி!’: மினியாபோலிஸ் கொலையை நியாயப்படுத்த MAGA நகரும்போது ICE துப்பாக்கிச் சூடு தொடர்பாக நியூயார்க்கில் பெரும் எதிர்ப்பு – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.