Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, February 15
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கொடைக்கானல் குணா குகை பகுதியில் 500 ரூபாய் நோட்டுகளை பறக்கவிட்ட குரங்கு: வீடியோ வைரல்
    மாநிலம்

    கொடைக்கானல் குணா குகை பகுதியில் 500 ரூபாய் நோட்டுகளை பறக்கவிட்ட குரங்கு: வீடியோ வைரல்

    adminBy adminJune 16, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கொடைக்கானல் குணா குகை பகுதியில் 500 ரூபாய் நோட்டுகளை பறக்கவிட்ட குரங்கு: வீடியோ வைரல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திண்டுக்கல்: கொடைக்கானல் குணா குகைப் பகுதியில் சுற்றுலாப் பயணியிடமிருந்து ரூ.500 கட்டு ஒன்றைப் பறித்துச்சென்ற குரங்கு, மரத்தின்மேல் சென்று, ஒவ்வொரு தாளாக பறக்கவிட்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். குணா படத்தால் பிரபலமான குணா குகை சுற்றுலா மையம், ‘மஞ்சுமல் பாய்ஸ்’ என்ற மவையாளப் படம் வெளியான பிறகு பல்வேறு மாநிலங்களிலும் பெரிதும் பிரபலமடைந்தது.

    இதையடுத்து, கடந்த கோடை சீசனில் அதிக சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனர். சில வாரங்களுக்கு முன்பு மலேசிய சுற்றுலாப் பயணிகளுக்கும், வனத் துறை ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த வாரம் இளைஞர் ஒருவர் ரீல்ஸ் மோகம் காரணமாக தடுப்பு வேலியைக் கடந்து சென்று, ஆபத்தான பகுதியில் வீடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்டதும் சர்ச்சைக்குள்ளானது.

    இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு குணா குகைப் பகுதியை பார்வையிட வந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர், தனது பையில் 500 ரூபாய் நோட்டுக் கட்டுகளை வைத்திருந்தார். அங்கு வந்த குரங்கு ஒன்று சுற்றுலாப் பயணி, அவர் வைத்திருந்த பையை பறித்துச்சென்றது. மரத்தின் மீது ஏறி அமர்ந்த குரங்கு, பையில் இருந்த 500 ரூபாய் கட்டை எடுத்து கையில் வைத்துக்கொண்டு, ஒவ்வொரு தாளாகப் பிரித்து வீசியது.

    குணா குகை பகுதியில் இருந்த சுற்றுலாப் பயணிகள் 500 ரூபாய் தாள்கள் பறப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். பணப் பையை பறிகொடுத்த சுற்றுலாப் பயணியும், அவருடன் வந்தவர்களும் பொறுமையாகக் காத்திருந்து, மேலிருந்து விழும் ரூபாய் நோட்டுகளைச் சேகரித்தனர். மற்ற சுற்றுலாப் பயணிகளும் கீழே விழுந்த ரூபாய் நோட்டுகளை சேகரித்துக் கொடுத்து உதவினர். சில ரூபாய் நோட்டுகள் பள்ளத்தாக்குப் பகுதிக்குள் விழுந்தன. இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

    December 3, 2025
    மாநிலம்

    மகிளா வங்கியை மூடிய பாஜக அரசு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

    December 3, 2025
    மாநிலம்

    “விருதுநகர் தொகுதியில் அதிமுகதான் போட்டி” – ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்

    December 3, 2025
    மாநிலம்

    “பிஹார் தேர்தல் முடிவை விமர்சன கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும்” – கமல்ஹாசன் எம்.பி

    December 3, 2025
    மாநிலம்

    ‘புலி வருது, புலி வருது’ என்பது போல – ஆந்திராவுக்கு மடைமாறிய முதலீடு: நயினார் நாகேந்திரன் கிண்டல்!

    December 3, 2025
    மாநிலம்

    மேயர் இல்லாததால் மதுரை மாநகராட்சியில் திமுக – மார்க்சிஸ்ட் இடையே அதிகார மோதல்!

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஒரு குடும்பத்தைத் தொடங்குவது பற்றி மக்கள் எப்படி நினைக்கிறார்கள் என்பதில் விளையாட்டுக் கதாபாத்திரங்களுடனான உணர்ச்சித் தொடர்புகள் ஒரு பங்கைக் கொண்டிருக்கக்கூடும், ஆய்வு முடிவுகள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ₹5.5 லட்சம் சிவப்பு புடவை மற்றும் கோர்செட் ட்விஸ்ட்: திஷா பதானி தேசி கிளாம் விதிகளை மீண்டும் எழுதினார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • காளான் அழகு: சீரம்களில் பூஞ்சை அடிப்படையிலான பொருட்களின் எழுச்சி
    • நிசார் வழங்கும் தரவு மண்ணின் ஈரப்பதத்தைக் கண்காணிக்க புதிய வழியை வழங்குகிறது – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நான்கு விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ் எக்ஸ் வழியாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வந்து குழுவினரை முழு வலிமைக்கு கொண்டு வந்தனர் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.