Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, February 15
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»என் மீது ஏதாவது கோபம் இருந்தால் தயவுசெய்து மன்னித்து கொள்ளுங்கள்: ராமதாஸிடம் மன்னிப்பு கேட்ட அன்புமணி
    மாநிலம்

    என் மீது ஏதாவது கோபம் இருந்தால் தயவுசெய்து மன்னித்து கொள்ளுங்கள்: ராமதாஸிடம் மன்னிப்பு கேட்ட அன்புமணி

    adminBy adminJune 16, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    என் மீது ஏதாவது கோபம் இருந்தால் தயவுசெய்து மன்னித்து கொள்ளுங்கள்: ராமதாஸிடம் மன்னிப்பு கேட்ட அன்புமணி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ​திரு​வள்​ளூர் / மது​ராந்​தகம்: ‘என் மீது ஏதாவது கோபம் இருந்​தால் தயவு செய்து மன்​னித்​துக் கொள்​ளுங்​கள்’ என பாமக நிறுவனர் ராம​தாஸிடம் அக்​கட்​சித் தலை​வர் அன்​புமணி மன்​னிப்பு கேட்ட சம்​பவம் அரசி​யல் வட்​டாரத்​தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்​ளது. பாமக​வில் அதன் நிறு​வனர் ராம​தாஸுக்​கும், கட்​சித் தலை​வர் அன்​புமணிக்​கும் இடையே மோதல் போக்கு நிலவி வரு​கிறது.

    இதற்​கிடையே, பாமக​வின் உறுப்​பினர் சேர்க்​கை, வாக்​குச் சாவடி குழுக்​கள் அமைப்பு உள்​ளிட்​டவை குறித்து விவா​திக்க முதல் மாவட்ட பொதுக்​குழு கூட்​டம் நேற்று திரு​வள்​ளூரில் நடை​பெற்​றது. இதில் அன்​புமணி, பொதுச்​செய​லா​ளர் வடிவேல் ராவணன், பொருளாளர் தில​க​பா​மா, சமூகநீதி பேரவை மாநில தலை​வர் பாலு, இளைஞர் சங்க செய​லா​ளர் பாலயோகி, அமைப்பு செய​லா​ளர் வெங்​கடேசன் உட்பட ஏராள​மானோர் பங்​கேற்​றனர்.

    தொடர்ந்து அன்​புமணி பேசி​ய​தாவது: பாமக தொடங்கி 36 ஆண்​டு​கள் ஆகிறது. பாமக சமூகநீ​திக்​காக தொடங்​கப்​பட்ட கட்​சி. சமூகநீ​தி, சாதி​வாரி கணக்​கெடுப்பை திமுக அரசு நடத்​தும் என்ற நம்​பிக்கை இல்​லை. பொய் வாக்​குறு​தி​களை கொடுத்து மக்​களை ஏமாற்​றும் திமுக ஆட்​சி​யை அகற்றும் கவுன்ட்​ட​வுன் இன்​றி​லிருந்து தொடங்​கு​கிறது. 2026-ல் பாமக அங்​கம் வகிக்​கும் கூட்​டணி ஆட்சி அமை​யும்.

    அடுத்​தவர்​கள் ஆட்​சிக்கு வர கட்​சியை நடத்​த​வில்​லை. உலக தந்​தையர் தின​மான இன்​று, ராம​தாஸ் உள்​ளிட்ட உலகத்​தில் உள்ள அனைத்து தந்​தைகளுக்​கும் வாழ்த்​துகள். ராம​தாஸ் நீண்ட ஆயுளோடு மனநிம்​ம​தி​யோடு, உடல் நலத்​தோடு, மகிழ்ச்​சி​யோடு வாழ​வேண்​டும். ராம​தாஸ் அவர்​களே உங்​களுக்கு என்​மீது ஏதாவது கோபம் இருந்​தால் தயவு செய்து என்னை மன்​னித்​துக் கொள்​ளுங்​கள். நான் என்ன செய்ய வேண்​டும் என சொல்​லுங்​கள்.

    ஒரு மகனாக, கட்​சி​யின் தலை​வ​னாக அதை நிறைவேற்​று​வேன். வருத்​தப்​ப​டாதீர்​கள், கவலைப்​ப​டாதீர்​கள், கோபப்​ப​டாதீர்​கள். ஏனென்​றால், இது நீங்​கள் 45 ஆண்​டு​கள் வளர்த்த கட்​சி. உங்​கள் கனவு​களை நனவாக்​கு​வோம். நீங்​கள் இன்று தேசிய தலை​வர். கடந்த ஆண்டு பிரதமர் மோடி, உங்​களை இந்​தி​யா​வின் மூத்த தலை​வர் என்று சொன்​னார். அந்த மதிப்பு எங்​கள் அனை​வருக்​கும்​ உள்​ளது. இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.

    திருஷ்டி: இதே​போல், மது​ராந்​தகத்​தில் நடந்த பொதுக்​குழு கூட்​டத்​தி​லும் அன்​புமணி பங்​கேற்​றார். அப்​போது அவர் பேசும்​போது, 45 நாட்​களில் மிகப்​பெரிய கூட்​டத்தை கூட்டி மாநாடு நடத்​தினோம். இதனால் ஆளுங்​கட்​சிக்கு வயிற்​றெரிச்​சல். இதனால், வந்த திருஷ்டி​யால் தான் இத்​தனை பிரச்​சினை​களும் நிகழ்ந்​தன. போதைப் பொருள் நடமாட்​டத்தை முதல்​வர் கண்​டு​கொள்​ள​வில்லை என குற்​றம்​சாட்​டி​னார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

    December 3, 2025
    மாநிலம்

    மகிளா வங்கியை மூடிய பாஜக அரசு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

    December 3, 2025
    மாநிலம்

    “விருதுநகர் தொகுதியில் அதிமுகதான் போட்டி” – ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்

    December 3, 2025
    மாநிலம்

    “பிஹார் தேர்தல் முடிவை விமர்சன கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும்” – கமல்ஹாசன் எம்.பி

    December 3, 2025
    மாநிலம்

    ‘புலி வருது, புலி வருது’ என்பது போல – ஆந்திராவுக்கு மடைமாறிய முதலீடு: நயினார் நாகேந்திரன் கிண்டல்!

    December 3, 2025
    மாநிலம்

    மேயர் இல்லாததால் மதுரை மாநகராட்சியில் திமுக – மார்க்சிஸ்ட் இடையே அதிகார மோதல்!

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஒரு குடும்பத்தைத் தொடங்குவது பற்றி மக்கள் எப்படி நினைக்கிறார்கள் என்பதில் விளையாட்டுக் கதாபாத்திரங்களுடனான உணர்ச்சித் தொடர்புகள் ஒரு பங்கைக் கொண்டிருக்கக்கூடும், ஆய்வு முடிவுகள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ₹5.5 லட்சம் சிவப்பு புடவை மற்றும் கோர்செட் ட்விஸ்ட்: திஷா பதானி தேசி கிளாம் விதிகளை மீண்டும் எழுதினார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • காளான் அழகு: சீரம்களில் பூஞ்சை அடிப்படையிலான பொருட்களின் எழுச்சி
    • நிசார் வழங்கும் தரவு மண்ணின் ஈரப்பதத்தைக் கண்காணிக்க புதிய வழியை வழங்குகிறது – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நான்கு விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ் எக்ஸ் வழியாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வந்து குழுவினரை முழு வலிமைக்கு கொண்டு வந்தனர் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.