Last Updated : 15 Jun, 2025 07:02 AM
Published : 15 Jun 2025 07:02 AM
Last Updated : 15 Jun 2025 07:02 AM

அகமதாபாத்: லண்டனில் வசித்தவர் அர்ஜுன் படோலியா. இவரது மனைவி பாரதி. இவர்களுக்கு 8 வயது மற்றும் 4 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாரதி காலமானார். அவரது கடைசி ஆசைப்படி குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள வடியா கிராமத்தில் உள்ள குளத்தில் மனைவியின் அஸ்தியை அர்ஜுன் கரைத்து பூஜைகள் செய்தார். பின்னர் லண்டனுக்கு ஏர் இந்தியா விமானத்தில் சென்றபோது அர்ஜுனும் விபத்தில் உயிரிழந்தார். தற்போது ஒரு மாதத்துக்குள் தாய், தந்தை இருவரையும் இழந்த 2 பெண் குழந்தைகள் லண்டனில் தவித்து வருகின்றனர். அர்ஜுனின் தந்தை காலமாகிவிட்டார். சூரத்தில் அவருடைய தாய் வசிக்கிறார். அந்த 2 பெண் குழந்தைகளின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.
FOLLOW US
தவறவிடாதீர்!