Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»கேதார்நாத் அருகே ஹெலிகாப்டர் விபத்து – 7 பேர் உயிரிழப்பு
    தேசியம்

    கேதார்நாத் அருகே ஹெலிகாப்டர் விபத்து – 7 பேர் உயிரிழப்பு

    adminBy adminJune 15, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கேதார்நாத் அருகே ஹெலிகாப்டர் விபத்து – 7 பேர் உயிரிழப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

    உத்தராகண்ட் மாநிலத்தின் புனிதத்தலமான கேதார்நாத்தில் இருந்து ஒரு ஹெலிகாப்டர் இன்று குப்தகாஷிக்கு அதிகாலை 5.30 மணிக்கு கிளம்பியது. இந்த ஹெலிகாப்டர் அதிகாலை 6.00 மணியளவில் ருத்ரபிரயாகையை கடக்க முயன்றபோது பெரும் விபத்துக்குள்ளானது. ருத்ரபிரயாகின் கவுரிகுண்ட் வனப்பகுதியில் அந்த ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில், ஹெலிகாப்டர் விமானி, பயணிகள் என 7 பேர் பலியாகினர்.

    இந்தத் தகவல் கிடைத்ததும், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆரியன் எனும் தனியார் நிறுவனத்திற்கு இந்த ஹெலிகாப்டர் சொந்தமானது. இந்த விபத்து, மோசமான வானிலை காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது

    இன்று அதே ஹெலிகாப்டர் குப்தகாஷியில் இந்து யாத்ரீகர்களுடன் கேதார்நாத்துக்கு பறந்துள்ளது. அனைவரையும் பத்திரமாக இறக்கிய பின் வேறு யாத்ரீகர்களுடன் குப்தகாஷிக்கு திரும்பியபோது இந்த சோக விபத்து நிகழ்ந்துள்ளது.

    முன்னதாக, இம்மாதம் ஏழாம் தேதி ருத்ரபிரயாக்கில் ஒரு ஹெலிகாப்டரின் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. கேதார்நாத்துக்கு கிளம்பிச் சென்ற இந்த ஹெலிகாப்டர் நெடுஞ்சாலையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அந்த ஹெலிகாப்டரில் இருந்த அனைத்து யாத்ரீகர்களும் விமானிகளும் பாதுகாப்பாக இருந்தனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அவசரமாக சிர்சி அருகே உள்ள நெடுஞ்சாலையில் தரையிறக்க வேண்டியிருந்தது. அந்த ஹெலிகாப்டரில் விமானி உட்பட 6 பேர் இருந்தனர், அவர்கள் மயிரிழையில் உயிர் தப்பி இருந்தனர். லேசான காயமடைந்த விமானி மருத்துவமனை சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ஜிஎஸ்டியால் 8 ஆண்டுகளில் 18 லட்சம் நிறுவனங்கள் மூடல்: ராகுல் காந்தி

    July 1, 2025
    தேசியம்

    மகாராஷ்டிராவில் ஒலிபெருக்கி கட்டுப்பாடு எதிரொலி: மசூதிகளின் பாங்கு ஒலிக்கும் ‘செயலி’க்கு வரவேற்பு!

    July 1, 2025
    தேசியம்

    பெண்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றும் தமிழகம் உள்ளிட்ட 18 மாநிலங்கள்: செலவு என்ன?

    July 1, 2025
    தேசியம்

    வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத் தொகை திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    July 1, 2025
    தேசியம்

    பிராமணர்களுக்கு தடை விதித்த பிஹார் கிராமம் – பின்னணி என்ன?

    July 1, 2025
    தேசியம்

    பயணிகளின் அனைத்து தேவைகளுக்குமான ரயில்ஒன் செயலி – ரயில்வே அமைச்சர் அறிமுகம்

    July 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயில் சாய்தள பாதை பணிகளுக்கு ஐகோர்ட் அனுமதி
    • குடல் ஆரோக்கியம்: செரிமான பிரச்சினைகளுடன் போராடுகிறீர்களா? ஹார்வர்ட் டாக்டர் இயற்கையாகவே குடலை குணப்படுத்தக்கூடிய 6 பானங்களைப் பகிர்ந்து கொள்கிறார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘சாரி’தான் பதிலா? அஜித்குமாரின் உயிரை திருப்பித் தர முடியுமா? – முதல்வர் ஸ்டாலினுக்கு பழனிசாமி கேள்வி
    • மெக்ஸிகோவின் பொம்மைகளின் தீவு: மரங்களிலிருந்து தொங்கும் சிதைந்துபோகும் பொம்மைகளுக்குப் பின்னால் உள்ள உண்மை என்ன
    • யூடியூப் வீடியோ பார்த்து பயிற்சி; ஸ்டம்பர் பந்து டூ டிஎன்பிஎல் – உத்வேகம் தரும் கனிபாலன்!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.