Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»சினிமா»ரூ.40 கோடியை கடந்த ‘மாமன்’ வசூல் – ‘வெற்றி விழா இல்லை’ என்கிறார் சூரி!
    சினிமா

    ரூ.40 கோடியை கடந்த ‘மாமன்’ வசூல் – ‘வெற்றி விழா இல்லை’ என்கிறார் சூரி!

    adminBy adminJune 13, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ரூ.40 கோடியை கடந்த ‘மாமன்’ வசூல் – ‘வெற்றி விழா இல்லை’ என்கிறார் சூரி!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ‘மாமன்’ படம் வெளியாகி 30 நாட்கள் ஆனதை முன்னிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் சூரி. மே 16-ம் தேதி சூரி நடிப்பில் வெளியான படம் ‘மாமன்’. இப்படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.

    தமிழகத்தில் ஒட்டுமொத்த வசூலில் ரூ.40 கோடியை கடந்து சாதனை படைத்தது. இதனால் படக்குழுவினர் அனைவருமே பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். இதனிடையே ‘மாமன்’ வெளியாகி 30 நாட்கள் ஆகிவிட்டதை தொடர்ந்து சூரி பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்தப் பதிவில் சூரி, “இன்று நம்ம படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 30-வது நாளை எட்டியது! இந்த வெற்றி முழுக்க முழுக்க – உங்கள் அன்புக்கே! வார்த்தைகள் போதவில்லை. மனமெல்லாம் மகிழ்ச்சியும் நன்றியும். படம் முதல் நாளில் எளிமையாகத் தொடங்கியது. ஆனால், சில நாட்களிலேயே குடும்ப ரசிகர்கள் திரையரங்குகளுக்குள் வந்ததோடு, அது ஒரு பெரும் அலை போல பரவியது.

    இன்று 30 நாட்கள் நிறைவடைந்துள்ள இந்த பயணம் – உங்கள் அன்பும் ஆதரவும் இல்லாமல் சாத்தியமா? நிச்சயமாக இல்லை! இந்த படம் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் படம் இல்லை. இது நம் வாழ்க்கையோடு இணைந்த உறவுகளின் தாக்கமும், சின்னச் சின்ன கனவுகளின் ஓசையும் கொண்ட கதை. அதனால் தான் பலர், ‘நம்ம வாழ்க்கையைப் போல தான்’, ‘மனதை தொட்ட படம்’” என்ற வார்த்தைகளால் பாராட்டினார்கள். அந்த ஒவ்வொரு வார்த்தையும் என் மனதை நெகிழச்செய்தது.

    வெற்றி விழா நடத்தவில்லையா? இல்லை… ஆனால், ஒவ்வொரு நாளும் உங்கள் பாராட்டுகள், சமூக ஊடகப் பதிவுகள் – இதுவே நம்ம உண்மையான வெற்றிக் கொண்டாட்டம்! ‘மாமன்’ குழுவுக்கு, விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், திங்க் மியூசிக், மீடியா நண்பர்கள் – உங்கள் ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

    உங்களின் அர்ப்பணிப்பு இல்லாமல் இந்த வெற்றி சாத்தியமில்லை. உங்கள் அன்பே எனக்கு புதிய உற்சாகம்! அதையே தூண்டிச் சிறந்த படங்களை வழங்க முயற்சி தொடரும். என் குடும்பத்துக்கும், நண்பர்களுக்கும் – நீங்கள் இல்லாமல் நான் இல்லை” என்று தெரிவித்துள்ளார் சூரி.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    சினிமா

    பாலா ஹீரோவாக அறிமுகமாகும் ‘காந்தி கண்ணாடி’  – ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

    June 30, 2025
    சினிமா

    தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் Vs ஃபெப்சி: மத்தியஸ்தரை நியமிக்க ஐகோர்ட் முடிவு

    June 30, 2025
    சினிமா

    ‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல் – இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்

    June 30, 2025
    சினிமா

    ‘நூறு நாள் திரைப்படம் 3’ – பிரதீப் ரங்கநாதன் மகிழ்ச்சி

    June 30, 2025
    சினிமா

    ‘திடீரென பேய் வரும், திடுக்கிட மாட்டீர்கள்!’ – அவசரக் கல்யாணம்

    June 30, 2025
    சினிமா

    கார்த்தியை ஆச்சரியப்பட வைத்த விஷ்ணு விஷால்!

    June 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கூர்மையான மூளை முதல் எடை இழப்பு வரை: சர்க்கரையை விட்டு வெளியேறுவதன் 5 அற்புதமான நன்மைகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பூவை ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு!
    • ஒரு நாய் கடித்த பிறகு என்ன செய்ய வேண்டும்: நீங்கள் பின்பற்றக்கூடிய அத்தியாவசிய உதவிக்குறிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • செல்லாத பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித் தர கோரி கோவை ஆட்சியர் அலுவலகம் வந்த மூதாட்டி!
    • பெண்களால் கட்டப்பட்ட இந்தியாவில் பிரபலமான நினைவுச்சின்னங்கள்; சில யுனெஸ்கோ பாரம்பரிய தளங்கள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.