Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, February 15
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மதுரையில் நடக்கக் கூடிய அரசியலுக்கான மாநாட்டை முருக பக்தர்கள் புறக்கணிக்க வேண்டும்: மார்க்சிஸ்ட்
    மாநிலம்

    மதுரையில் நடக்கக் கூடிய அரசியலுக்கான மாநாட்டை முருக பக்தர்கள் புறக்கணிக்க வேண்டும்: மார்க்சிஸ்ட்

    adminBy adminJune 13, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மதுரையில் நடக்கக் கூடிய அரசியலுக்கான மாநாட்டை முருக பக்தர்கள் புறக்கணிக்க வேண்டும்: மார்க்சிஸ்ட்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருவள்ளூர்: “மதுரையில் ஆன்மிக மாநாடு என்ற பெயரில் நடக்கக் கூடிய அரசியலுக்கான மாநாட்டை உண்மையான முருக பக்தர்கள் புறக்கணிக்க வேண்டும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

    மத்திய பாஜக அரசின் பல்வேறு செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக அரசு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று காலை திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கத்தில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

    இதில், பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான விபத்து, இந்தியா மட்டுமல்லாமல், பல்வேறு நாடுகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

    இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், காயமடைந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உயர்தர சிகிச்சை வழங்கவும் மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விமான விபத்து தொடர்பாக நேர்மையான, சுதந்திரமான நீதி விசாரணை நடத்தப்படவேண்டும்.

    எப்படியாவது தமிழகத்தில் ஆட்சியைப் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு பாஜக பல்வேறு தந்திரங்களில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக, ஜூன் 22-ம் தேதி மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு என்ற பெயரில் அரசியல் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளது. ஆன்மிக மாநாடு என்ற பெயரில் நடக்கக் கூடிய இந்த அரசியலுக்கான மாநாட்டை புரிந்து கொண்டு, உண்மையான முருக பக்தர்கள் அந்த மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்.

    தமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி ஆட்சியை பிடிக்க முடியாது. ஏனென்றால், பாஜக- அதிமுக ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. சந்தர்ப்பவாத கூட்டணிக்கு தமிழக மக்கள் ஆதரவாக இருக்க மாட்டார்கள். 2018-ம் ஆண்டு முதல் திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து வரும் எந்த ஒரு கட்சியும், பாஜக கூட்டணிக்கு செல்வதற்கு வாய்ப்பில்லை.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கனவே போட்டியிட்ட தொகுதிகளைவிட கூடுதலான தொகுதிகளில் போட்டியிட்டு, கூடுதலான சட்டப்பேரவை உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு செல்லவேண்டும் என, முடிவு எடுத்துள்ளோம். எவ்வளவு தொகுதிகள் என்பது பேச்சுவார்த்தையின்போதுதான் தெரிய வரும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கூடுதலான தொகுதிகளை திமுக கொடுக்காமல் இருப்பதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால், திமுக ஆட்சி தொடர வேண்டும் என்பது திமுகவின் விருப்பம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

    December 3, 2025
    மாநிலம்

    மகிளா வங்கியை மூடிய பாஜக அரசு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

    December 3, 2025
    மாநிலம்

    “விருதுநகர் தொகுதியில் அதிமுகதான் போட்டி” – ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்

    December 3, 2025
    மாநிலம்

    “பிஹார் தேர்தல் முடிவை விமர்சன கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும்” – கமல்ஹாசன் எம்.பி

    December 3, 2025
    மாநிலம்

    ‘புலி வருது, புலி வருது’ என்பது போல – ஆந்திராவுக்கு மடைமாறிய முதலீடு: நயினார் நாகேந்திரன் கிண்டல்!

    December 3, 2025
    மாநிலம்

    மேயர் இல்லாததால் மதுரை மாநகராட்சியில் திமுக – மார்க்சிஸ்ட் இடையே அதிகார மோதல்!

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நான்கு விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ் எக்ஸ் வழியாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வந்து குழுவினரை முழு வலிமைக்கு கொண்டு வந்தனர் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “இது எனது மூன்றாவது ஆண்டு கொண்டாட்டம், அடுத்த ஆண்டு அதை மீண்டும் செய்ய என்னால் காத்திருக்க முடியாது”: மொரீஷியஸில் மகாசிவராத்திரியை அனுபவித்த ஒரு வெளிநாட்டவரின் கணக்கு – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பேரக்குழந்தை அழுத்தம் குடும்பப் போராக வெடிக்கிறது: கணவன் அம்மாவை விட மனைவியைத் தேர்வு செய்கிறான், ரெடிட் பதிலளித்தார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தவறான காலணி கோட்பாடு: உங்கள் காலணி ஏன் உங்கள் ஆடையுடன் பொருந்தக்கூடாது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “பனி எங்கள் குப்பைத் தொட்டி அல்ல. குடிமை உணர்வைக் கொண்டு வரும் அதிக நேரம் குளிர்ச்சியான போக்கு”: மலைகளில் இருந்து ஒரு பாடம் என்னால் மறக்கவே முடியாது – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.