சென்னை: இக்னோ தொலைதூரக் கல்வி ஜூன் பருவ இறுதி தேரவுகள் நாளை (ஜூன் 12) தொடங்கி ஜூலை 19 வரை நடைபெற உள்ளன.
இது தொடர்பாக இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழக இக்னோ சென்னை மணடல முதுநிலை இயக்குநர் கே.பன்னீர்செல்வம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இக்னோ ஜூன் பருவ இறுதி தேர்வுகள் ஜூன் 12-ம் தேதி தொடங்கி ஜூலை 19-ம் தேதி வரை நடைபெற உள்ளன. சென்னை, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் 4,510 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். சிறைவாசிகளுக்கான 3 சிறைச்சாலை தேர்வு மையங்கள் உள்பட மொத்தம் 12 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வெழுத செல்லும் மாணவர்கள் ஹால்டிக்கெட் மற்றும் மாணவர் அடையாள அட்டையை வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தேர்வறையில் மொபைல் போன்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. மேலும், விவரங்களுக்கு சென்னை பெரியார் திடலில் இயங்கும் இக்னோ மண்டல அலுவலகத்தை 044 – 26618489 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, ஜூன் கல்வி ஆண்டு சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூன் 9-ம் தேதி தொடங்கியது. தொலைதூரக் கல்வியில் சேர விரும்பும் மாணவர்கள் என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஜூலை 15-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.