புதுடெல்லி: டெல்லி துவாரகா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 7வது மாடியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, 8 தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன.
துவாரகா பகுதியின் செக்டார் 13 இல் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது மாடியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எம்ஆர்வி பள்ளிக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்து குறித்து டெல்லி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, எட்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
தற்போது தீயை அணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். “ஆரம்ப அறிக்கைகளின்படி, இரண்டு முதல் மூன்று பேர் உள்ளே சிக்கியிருக்கலாம்” என்று அவர் கூறியுள்ளார். எனினும், யாரும் காயமடைந்துள்ளார்களா என்பது குறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல் இல்லை. மேலும், தீ விபத்துக்கான காரணமும் இன்னும் கண்டறியப்படவில்லை.

