Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»“பஹல்காம் பயங்கரவாதிகள் இன்னும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை” – காங்கிரஸ் விமர்சனம்
    தேசியம்

    “பஹல்காம் பயங்கரவாதிகள் இன்னும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை” – காங்கிரஸ் விமர்சனம்

    adminBy adminJune 5, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “பஹல்காம் பயங்கரவாதிகள் இன்னும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை” – காங்கிரஸ் விமர்சனம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் நேரடியாக ஈடுபட்ட பயங்கரவாதிகள் இன்னும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை என தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, இது பிரதமர் நரேந்திர மோடிக்கு நிச்சயமாகத் தெரியும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஜூன் 6) காலை ஜம்மு காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்கிறார். பிரதமரின் ஜம்மு காஷ்மீர் பயணத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக சாடியுள்ளது.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் காங்கிரஸ் தகவல் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள பதிவில், “பிரதமர் நாளை ஜம்மு காஷ்மீர் செல்கிறார். ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு நேரடியாகப் பொறுப்பான பயங்கரவாதிகள் இன்னும் பிடிபடவில்லை என்பது நிச்சயம் அவர் அறிந்திருப்பார். அதோடு, டிசம்பர் 2023 -ல் பூஞ்ச் ​​மற்றும் அக்டோபர் 2024 -ல் ககாங்கீர் மற்றும் குல்மார்க்கில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களிலும் இதே பயங்கரவாதிகள் ஈடுபட்டதாக சில தகவல்கள் வந்துள்ளன – அவை இன்னும் மறுக்கப்படவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

    நாளை ஜம்மு காஷ்மீர் செல்லும் பிரதமர் ஜம்மு – ஸ்ரீநகர் இடையே உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலமான செனாப் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைக்கிறார். அதன் பிறகு, நாட்டின் முதல் கம்பிவழி ரயில் பாலமான அஞ்சி பாலத்தைப் பார்வையிட்டு திறந்து வைக்கிறார். நண்பகல் 12 மணியளவில் கத்ராவில் இருந்து ஸ்ரீநகர் வரை இயக்கப்படும் 2 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து, கத்ராவில் ரூ.46,000 கோடிக்கும் அதிக மதிப்புடைய பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர், நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

    இந்நிலையில், பிரதமரின் ஜம்மு பயணத்தைக் குறிப்பிட்டு ஜெய்ராம் ரமேஷ் பஹல்காம் தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ஜிஎஸ்டியால் 8 ஆண்டுகளில் 18 லட்சம் நிறுவனங்கள் மூடல்: ராகுல் காந்தி

    July 1, 2025
    தேசியம்

    மகாராஷ்டிராவில் ஒலிபெருக்கி கட்டுப்பாடு எதிரொலி: மசூதிகளின் பாங்கு ஒலிக்கும் ‘செயலி’க்கு வரவேற்பு!

    July 1, 2025
    தேசியம்

    பெண்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றும் தமிழகம் உள்ளிட்ட 18 மாநிலங்கள்: செலவு என்ன?

    July 1, 2025
    தேசியம்

    வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத் தொகை திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    July 1, 2025
    தேசியம்

    பிராமணர்களுக்கு தடை விதித்த பிஹார் கிராமம் – பின்னணி என்ன?

    July 1, 2025
    தேசியம்

    பயணிகளின் அனைத்து தேவைகளுக்குமான ரயில்ஒன் செயலி – ரயில்வே அமைச்சர் அறிமுகம்

    July 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயில் சாய்தள பாதை பணிகளுக்கு ஐகோர்ட் அனுமதி
    • குடல் ஆரோக்கியம்: செரிமான பிரச்சினைகளுடன் போராடுகிறீர்களா? ஹார்வர்ட் டாக்டர் இயற்கையாகவே குடலை குணப்படுத்தக்கூடிய 6 பானங்களைப் பகிர்ந்து கொள்கிறார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘சாரி’தான் பதிலா? அஜித்குமாரின் உயிரை திருப்பித் தர முடியுமா? – முதல்வர் ஸ்டாலினுக்கு பழனிசாமி கேள்வி
    • மெக்ஸிகோவின் பொம்மைகளின் தீவு: மரங்களிலிருந்து தொங்கும் சிதைந்துபோகும் பொம்மைகளுக்குப் பின்னால் உள்ள உண்மை என்ன
    • யூடியூப் வீடியோ பார்த்து பயிற்சி; ஸ்டம்பர் பந்து டூ டிஎன்பிஎல் – உத்வேகம் தரும் கனிபாலன்!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.