கே.பாக்யராஜ், மீரா கிருஷ்ணன், ஜீவா தங்கவேல், விட்டல் ராவ், குரு அரங்கதுரை, நிஷாந்த், ஜெயந்தி தியாகராஜன் மற்றும் ஆழியாறு அறிவுத் திருக்கோயிலை சேர்ந்தவர்கள் நடித்துள்ள படம், ‘ஆனந்த வாழ்க்கை’. ஆர்.சுப்ரமணிய பாரதி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார். சத்யா.சி, இசையமைத்துள்ளார். கே.கோகுல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஊரில் உள்ளவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆற்றல் கொண்ட கே.பாக்யராஜ், தன் குடும்பத்தில் உள்ளவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமல் தவிக்கிறார். அப்போது வேதாத்திரி மகரிஷியின் ஆழியார் அறிவு திருக்கோயில் பற்றிக் கேள்விப்பட்டு, குடும்பத்தினரை அங்கு அழைத்துச் செல்கிறார்.
அங்கு எளிய முறை யோகப் பயிற்சிகளைக் கற்று, எது உண்மையான ஆனந்த வாழ்க்கை என்பதைப் புரிந்து கொள்வதாகக் கதை செல்லும். எஸ்கேஎம் மயிலானந்தம் வழிகாட்டுதலின்படி,ஆழியாறு அறிவுத் திருக்கோயிலுடன் உலக சமுதாய சேவா சங்கம் இதைத் தயாரித்துள்ளது.