‘ஹிரி ஹர வீர மல்லு’ வெளியீடு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘ஹரி ஹர வீர மல்லு’ திரைப்படம் ஜூன் 12-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இப்போது கிராபிக்ஸ் காட்சிகளின் தாமதத்தால் இப்படம் வெளியாகாது என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இன்னும் பல காட்சிகள் தொடங்கப்படவே இல்லை என்பதால், ஜூன் 12-ம் தேதி வெளியீடு சாத்தியமில்லை என்று கூறப்படுகிறது.
இந்த தாமதத்தை கணக்கில் கொண்டு, படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. விரைவில் வெளியீட்டு தேதி உறுதியானவுடன் மீண்டும் விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. ஜூன் 27 அல்லது ஜூலை 4 வெளியிடலாம் என்ற பேச்சுவார்த்தையில் இறங்கியிருக்கிறார்கள். ஆனால், அந்த தேதியில் சாத்தியமில்லை என்கிறார்கள். ஏனென்றால் ‘கண்ணப்பா’ மற்றும் ‘கிங்டம்’ ஆகிய படங்கள் வெளியாக இருக்கிறது.
ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஹரி ஹர வீர மல்லு’. பவன் கல்யாண், நிதி அகர்வால், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தினை ஜோதி கிருஷ்ணா இயக்கியுள்ளார். இப்படத்தின் புதிய வெளியீட்டு தேதி என்ன என்பது விரைவில் தெரியவரும்.