Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, April 8
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»இந்தியர்களை யாராலும் பிரிக்க முடியாது: லாத்​வியாவில் திமுக எம்.பி. கனிமொழி பேச்சு
    உலகம்

    இந்தியர்களை யாராலும் பிரிக்க முடியாது: லாத்​வியாவில் திமுக எம்.பி. கனிமொழி பேச்சு

    adminBy adminJune 1, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இந்தியர்களை யாராலும் பிரிக்க முடியாது: லாத்​வியாவில் திமுக எம்.பி. கனிமொழி பேச்சு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    இனி நம்மை யாராலும் பிரிக்க முடியாது என்று திமுக கட்சி எம்.பி. கனிமொழி பேசியுள்ளார்.

    ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவை உலகுக்கு அம்பலப்படுத்தவும், ‘ஆபரேஷன் சிந்தூர்’ போன்ற இந்தியாவின் தற்காப்பு உரிமையை எடுத்துரைக்கவும் சர்வதேச நாடுகளுக்கு இந்திய பிரதிநிதிகள் சென்றுள்ளனர்.

    இதற்காக அமைக்கப்பட்டுள்ள 7 அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவில், தி.மு.க. எம்.பி. கனிமொழி தலைமையிலான குழுவும் ஒன்று. இந்த குழுவினர் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணமாகி உள்ளனர். இதில் ரஷ்யா, சுலோவேனியா, கிரீஸ் உள்ளிட்ட நாடுகளில் தங்கள் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் லாத்வியா நாட்டை அடைந்தனர்.

    லாத்வியா நாட்டின் ரிகா நகரில் வசிக்கும் இந்தியர்களுடன் கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழுவினர் கலந்துரையாடினர். அப்போது கனிமொழி பேசியதாவது:

    ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் இந்திய சுற்றுலாப் பயணிகள் தாக்கப்பட்டனர். அப்போது அவர்களின் குடும்பங்கள், அன்புக்குரியவர்கள், குழந்தைகள் முன்னிலையில் 26 அப்பாவி உயிர்களை இழந்தோம். பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியர்களை பிரித்துப் பார்க்க விரும்புகின்றனர். எங்கள் நம்பிக்கைகளின் அடிப்படையில் நம்மைப் பிரிக்க அவர்கள் விரும்புகின்றனர். ஆனால் காஷ்மீர் மக்கள், இந்தியர்களாக பாகிஸ்தானுக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராடி ஒன்றாக நின்றபோது, இனி எதுவும் நம்மைப் பிரிக்கப் போவதில்லை என்ற செய்தி மிகத் தெளிவாக இருந்தது. இனி நம்மை யாராலும், எதற்காகவும் பிரிக்க முடியாது என்ற செய்தியை உலகுக்கு அறிவித்துவிட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக, ரிகாவில் நடைபெற்ற ஒரு சமூக நிகழ்வில், ஆபரேஷன் சிந்தூர் குறித்த குறும்படம் திரையிடப்பட்டது. இதை ரிகாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் தயாரித்திருந்தனர். அந்த குறும்படத்தில் இந்திய சமூகத்தின் ஒற்றுமை மற்றும் ஆதரவு குறித்து வலியுறுத்தியதற்காக கனிமொழி அவர்களை பாராட்டினார்.

    அப்போது அவர் கூறும்போது, “லாத்வியாவில் இந்திய சமூகத்தைப் பார்ப்பது மிகவும் மனதைக் கவரும் அனுபவமாக இருந்தது. குறிப்பாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவர்கள் திரையிட்ட குறும்படத்தைப் பார்ப்பது மிகவும் மனதைக் கவரும் அனுபவமாக அமைந்தது. இது இந்திய ராணுவத்துக்கும், நமது நாட்டைப் பாதுகாக்க அவர்கள் செய்த பெரும் தியாகங்களுக்கும் ஒரு அஞ்சலியாக அமைந்தது” என்றார். நிகழ்ச்சியில் ஐரோப்பிய யூனியனுக்கான இந்தியாவின் முன்னாள் தூதர் மஞ்சீவ் சிங் புரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    கனிமொழி தலைமையிலான இந்திய எம்.பி.க்கள் குழுவில் ராஜீவ் ராய் (சமாஜ்வாதி), மியான் அல்டாப் அகமது (ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி), பிரிஜேஷ் சவுடா (பாஜக), பிரேம் சந்த் குப்தா (ராஷ்டிரிய ஜனதா தளம்), அசோக் குமார் மித்தல் (ஆம் ஆத்மி), முன்னாள் தூதர் ஜாவேத் அஷ்ரப் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    புளோரிடா ஸ்டேட் யுனிவர்சிட்டி படப்பிடிப்புக்கு ChatGPT உதவியதா? பாதிக்கப்பட்டவரின் குடும்பம் OpenAI – தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு எதிராக வழக்குத் தொடரத் திட்டமிட்டுள்ளது

    April 8, 2026
    உலகம்

    டெக்சாஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி யுடி ஆஸ்டின் மாணவி சவிதா ஷனின் நினைவாக குடும்பம் உதவித்தொகையை அமைத்துள்ளது. உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 8, 2026
    உலகம்

    H-1B லாட்டரியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்: ரெடிட்டர் இந்தியாவிற்கு திரும்பி வர விரும்புகிறார், ‘வித்தியாசமான சோகமாகவும் குழப்பமாகவும் உணர்கிறேன்’ – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 8, 2026
    உலகம்

    நியூயார்க் மாநிலத்தில் $200,000 மோசடி செய்த இந்தியர் கைது; மக்களை அழைத்து, ‘நீங்கள் வாரண்டில் தேடப்படுகிறீர்கள்’ – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 8, 2026
    உலகம்

    கனடாவில் உள்ள இந்தியப் பெண் ‘கவனச்சிதறல் திருட்டு’க்கு பலியான பிறகு அதிர்ச்சியடைந்தார், நான்கு தங்க வளையல்கள் மணிக்கட்டில் கழற்றப்பட்டன – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 7, 2026
    உலகம்

    1965 இல் NYC ஒருமுறை வானளாவிய கூரைகளில் இருந்து விமான நிலையங்களுக்கு ஹெலிகாப்டர்களை பறக்கவிட்டது உங்களுக்குத் தெரியுமா? இதோ எப்படி எல்லாம் தவறாக நடந்தது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சந்திரனில் தண்ணீர் உள்ளது, ஆனால் அது எதிர்கால விண்வெளி பயணங்களுக்கு போதுமானதாக இருக்காது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • புளோரிடா ஸ்டேட் யுனிவர்சிட்டி படப்பிடிப்புக்கு ChatGPT உதவியதா? பாதிக்கப்பட்டவரின் குடும்பம் OpenAI – தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு எதிராக வழக்குத் தொடரத் திட்டமிட்டுள்ளது
    • சமூக அதிகாரத்தின் 5 அமைதியான சட்டங்கள், உங்களை உடனடியாக மேலும் மதிக்கும்
    • நீங்கள் கடந்த வாழ்க்கையை வாழ்ந்தீர்களா என்பது யாருக்குத் தெரியும்? உங்கள் ஆன்மா முந்தைய வாழ்க்கையில் வாழ்ந்திருக்கக்கூடிய 10 அறிகுறிகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • விமானத்தில் ஏன் கருப்பு சாக்ஸ் அணியக்கூடாது : காரணம் உங்களை அதிர்ச்சி அடையும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • April 2026
    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.