Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»‘வள்ளுவரை சனாதன துறவி என்பதா?’ – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சுக்கு முத்தரசன் கண்டனம்
    மாநிலம்

    ‘வள்ளுவரை சனாதன துறவி என்பதா?’ – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சுக்கு முத்தரசன் கண்டனம்

    adminBy adminMay 31, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘வள்ளுவரை சனாதன துறவி என்பதா?’ – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சுக்கு முத்தரசன் கண்டனம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: “மெய் ஞானம் போதித்த வள்ளுவரை ஆன்மிகம் என்ற பெயரில் மனிதர்களுக்கு மதவெறியூட்டி, பகையும், வெறுப்பும் வளர்த்து வரும், சனாதனக் கும்பலின் மூலவராக காட்ட முயற்சிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிலித்தனமாக பேசி வருவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.” என்று அக்கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி அருகில் கோயில் திருப்பணி அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, உலகப் பொதுமறையாம் திருக்குறள் தந்த வள்ளுவரை சனாதன தர்மத்தின் மிகப் பெரிய துறவி என்று கூறி இழிவுபடுத்தியுள்ளார். திருக்குறளின் மேன்மை அறிந்த மகாகவி பாரதி, வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு என அவரை போற்றிக் கொண்டாடினார்.

    நோபல் பரிசு பெற்ற மாமனிதர் ஆல்பர் சுவைட்சர் “வள்ளுவரின் அறநெறியில் காணும் பேரறிவு, உலக இலக்கியங்களில் அரிதாகவே இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். 19-ம் நூற்றாண்டின் இறுதியில் திருக்குறளை மொழிபெயர்ப்பு செய்த ஜி.யூ.போப் “மொழி, இனம், சமயம், நாடு என எல்லா எல்லைகளையும் அனைத்துலக மனிதனைப் பற்றி பாடியவர் வள்ளுவர்” என்கிறார்

    “இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து – கெடுக உலகியற்றியான்.” என கற்பனை கருத்தியலை சாடி, உழைப்பின் மேன்மை குறித்து திரும்ப, திருப்ப எடுத்துக் கூறி, மெய் ஞானம் போதித்த வள்ளுவரை ஆன்மிகம் என்ற பெயரில் மனிதர்களுக்கு மதவெறியூட்டி, பகையும், வெறுப்பும் வளர்த்து வரும், சனாதனக் கும்பலின் மூலவராக காட்ட முயற்சிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிலித்தனமாக பேசி வருவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.” என்று அவர் கூறியுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அரசின் தவறுகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள்: அதிமுக ஐ.டி. அணி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்

    June 29, 2025
    மாநிலம்

    இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக தமிழகத்தில் ஊடுருவ முயன்ற 3 பேர் கைது

    June 29, 2025
    மாநிலம்

    பலர் திமுகவில் இணைந்த நிலையில் இன்று கூடும் மதிமுக நிர்வாக குழு

    June 29, 2025
    மாநிலம்

    பாஜகவுடன் கூட்டணி வைக்க பேசச் சொன்னதே ராமதாஸ்தான்: அன்புமணி பகிரங்க குற்றச்சாட்டு

    June 29, 2025
    மாநிலம்

    தேர்தல் பிரச்சாரத்துக்கு 68,000 டிஜிட்டல் நிர்வாகிகள்: திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் ஸ்டாலின் தகவல்

    June 29, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் ஜூலை 4 வரை மழை பெய்ய வாய்ப்பு

    June 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ட்ரம்பின் ஈரான் குண்டுவெடிப்புகளுக்கு நெட்டிசன்கள் பதிலளிக்கின்றன; ஈரான் வேலைநிறுத்தங்களுக்குப் பிறகு அமெரிக்க இராணுவத்தில் சேர பரோன் டிரம்ப் அழைக்கிறார் | உலக செய்திகள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • உத்தர பிரதேசத்தில் கதாகாலட்சேபகர் மீது தாக்குதல்: 2 சமூகத்துக்கு இடையே பெரிதாகும் பிரச்சினை
    • அறியாமல் செய்த பாவம் நீக்கும் பாபநாசம் ராமலிங்க சுவாமி | ஞாயிறு தரிசனம்
    • அரசின் தவறுகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள்: அதிமுக ஐ.டி. அணி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்
    • இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக தமிழகத்தில் ஊடுருவ முயன்ற 3 பேர் கைது

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.