Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, June 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»உயர் கல்வி நிறுவனங்களில் நிலவும் பாகுபாடு மனுவாதத்தின் புதிய வடிவம்: ராகுல் காந்தி
    தேசியம்

    உயர் கல்வி நிறுவனங்களில் நிலவும் பாகுபாடு மனுவாதத்தின் புதிய வடிவம்: ராகுல் காந்தி

    adminBy adminMay 31, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    உயர் கல்வி நிறுவனங்களில் நிலவும் பாகுபாடு மனுவாதத்தின் புதிய வடிவம்: ராகுல் காந்தி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புது டெல்லி: உயர்கல்வி நிறுவனங்களில் பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோருக்கு எதிரான பாகுபாடு மோடி அரசாங்கத்தால் கடைபிடிக்கப்படுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். தகுதியானவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை (NFS) என்று நிராகரிப்பது மனுவாதத்தின் ஒரு புதிய வடிவம் என்று அவர் சாடியுள்ளார்.

    இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பொருத்தமானவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது மனுவாதத்தின் புதிய வடிவம் என்பதுதான் உண்மை. தகுதியான பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை கல்வி மற்றும் தலைமைத்துவத்திலிருந்து விலக்கி வைக்க வேண்டுமென்றே ‘தகுதி நீக்கம்’ செய்யப்படுகிறார்கள். கல்விதான் சமத்துவத்துக்கான மிகப்பெரிய ஆயுதம் என்று பாபாசாகேப் கூறியிருந்தார். ஆனால் மோடி அரசாங்கம் அந்த ஆயுதத்தை மழுங்கடிப்பதில் மும்முரமாக உள்ளது.

    டெல்லி பல்கலைக்கழகத்தில், பேராசிரியர்களின் 60 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களும், இணைப் பேராசிரியர்களின் 30 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களும் பொருத்தமானவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை (NFS – Not For Suitable) என்று கூறி காலியாக வைக்கப்பட்டுள்ளன. ஐஐடிகள், மத்திய பல்கலைக்கழகங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. எல்லா இடங்களிலும் இதுபோல ஒரே சதி நடக்கிறது.

    பொருத்தமானவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது அரசியலமைப்பின் மீதான தாக்குதல். பொருத்தமானவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது சமூக நீதிக்கு இழைக்கும் துரோகம். இது கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான போராட்டம் மட்டுமல்ல, உரிமைகள், மரியாதை மற்றும் பங்கேற்புக்கான போராட்டம். நான் இப்போது டியுஎஸ்யு மாணவர்களிடம் பேசினேன், பாஜக/ஆர்எஸ்எஸ்-ன் ஒவ்வொரு இடஒதுக்கீட்டு எதிர்ப்பு நடவடிக்கைக்கும் அரசியலமைப்பின் சக்தியுடன் பதிலளிப்போம்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    பயணிகள் ரயில் கட்டணம் உயர்வு: எத்தனை கி.மீ.-க்கு எவ்வளவு அதிகரிப்பு?

    June 30, 2025
    தேசியம்

    நுகர்வு கலாசாரம் கற்பனை செய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தும்: திரவுபதி முர்மு பேச்சு

    June 30, 2025
    தேசியம்

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஸ்பெயின், போர்ச்சுகல், பிரேசில் நாடுகளுக்கு 6 நாள் பயணம்

    June 30, 2025
    தேசியம்

    மணிப்பூரில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு – 4 பேர் உயிரிழப்பு

    June 30, 2025
    தேசியம்

    மூவரின் திட்டமிட்ட ‘கொடூரம்’ – கொல்கத்தா மாணவி வன்கொடுமை சம்பவத்தில் காவல் துறை புதிய தகவல்

    June 30, 2025
    தேசியம்

    தெலங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் விபத்து: 8 பேர் பலி; 10-க்கும் மேற்பட்டோர் காயம்

    June 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஒரு நாய் கடித்த பிறகு என்ன செய்ய வேண்டும்: நீங்கள் பின்பற்றக்கூடிய அத்தியாவசிய உதவிக்குறிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • செல்லாத பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித் தர கோரி கோவை ஆட்சியர் அலுவலகம் வந்த மூதாட்டி!
    • பெண்களால் கட்டப்பட்ட இந்தியாவில் பிரபலமான நினைவுச்சின்னங்கள்; சில யுனெஸ்கோ பாரம்பரிய தளங்கள்
    • பாலா ஹீரோவாக அறிமுகமாகும் ‘காந்தி கண்ணாடி’  – ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
    • சிறு வணிகர்களுக்கான மின் கட்டண சலுகைகள் என்னென்ன? – தமிழக அரசு அறிவிப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.