Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»சினிமா»‘கண்ணப்பா’ ஹார்ட் டிஸ்க் விவகாரத்தில் நடந்தது என்ன? – விஷ்ணு மஞ்சு விளக்கம்
    சினிமா

    ‘கண்ணப்பா’ ஹார்ட் டிஸ்க் விவகாரத்தில் நடந்தது என்ன? – விஷ்ணு மஞ்சு விளக்கம்

    adminBy adminMay 30, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘கண்ணப்பா’ ஹார்ட் டிஸ்க் விவகாரத்தில் நடந்தது என்ன? – விஷ்ணு மஞ்சு விளக்கம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ‘கண்ணப்பா’ ஹார்ட் டிஸ்க் மாயமான விவகாரத்தில் நடந்தது என்ன என்பதை விஷ்ணு மஞ்சு சென்னையில் விளக்கி இருக்கிறார்.

    ‘கண்ணப்பா’ படத்தின் ஹார்ட் டிஸ்க் மாயமான விவகாரம் தெலுங்கு திரையுலகில் பெரும் சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. இது தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை விஷ்ணு மஞ்சு சென்னையில் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசினார்.

    அதில் விஷ்ணு மஞ்சு, “சமீபகாலமாக சில சர்ச்சையான சம்பவங்கள் நடப்பதை நீங்கள் அறிவீர்கள். அதைப் பற்றி நான் இங்கு பேச விரும்பவில்லை. அதே சமயம், என்ன நடந்தது என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். ‘கண்ணப்பா’ பிரமாண்டமான படைப்பாக உருவாகியுள்ளது. படத்தின் கிராபிக்ஸ் பணிகள் உலகம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. லண்டன் மற்றும் துபாய் நாடுகளிலும், இந்தியாவில் 8 இடங்களிலும் பணிகள் நடக்கிறது.

    பொதுவாக படத்தின் காட்சிகள் அடங்கிய டிரைவ் இரண்டு காப்பிகள் எடுக்கப்படும். ஒன்று எடிட்டிங் ஸ்டூடியோவுக்கும், மற்றொன்று தயாரிப்பு அலுவலகத்திற்கும் அனுப்பப்படும், இது தான் நம்முடைய வழக்கம். அதன்படி, கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அதன் சில காட்சிகள் டிரைவ் மூலம் அனுப்பப்பட்டது. ஆனால், அதை எங்கள் தரப்பு கேட்கவில்லை. கிராபிக்ஸ் நிறுவனத்தினர் எங்கள் முகவரிக்கு அனுப்பி விட்டார்கள்.

    அதாவது, எங்கள் நிறுவன முகவரி மற்றும் ஜி.எஸ்.டி முகவரி என இரண்டு உள்ளது. ஜி.எஸ்.டி முகவரி அப்பாவுடைய இல்லம். அங்கு தான் எங்கள் தொடர்புடைய அனைத்து கடிதம் மற்றும் கூரியர்கள் வரும். சம்மந்தப்பட்டவர்கள் அதை அங்கு சென்று வாங்கிக் கொள்வோம். அதுபோல், எனக்கான அந்த டிரைவ் அந்த முகவரிக்கு வந்திருக்கிறது. அப்போது, மனோஜ் வீட்டில் இருக்கும் இரண்டு பேர் அந்த கூரியரை வாங்கியதாக சொல்லப்படுகிறது. இந்த விஷயமே எங்களுக்கு தெரியாது.

    அப்போது, இரண்டு வாரங்களுக்குப் பிறகு ‘கண்ணப்பா’ படத்தின் காட்சிகள் லீக் ஆனால் எப்படி இருக்கும், என்ற ஒரு எக்ஸ் பதிவு வெளியானது. அதை வைத்து தான் எங்களுடைய காட்சிகள் அடங்கிய டிரைவ் கைமாறியிருப்பது தெரிய வந்தது. சரி இதை பெரிதுப்படுத்தக் கூடாது என்று நினைத்தேன், சமாதன முறையில் அதை கேட்டோம், ஆனால் அதற்கு சரியான பதில் வரவில்லை. சரி, போலீஸ் மூலம் சமாதனமாக கேட்டுப் பார்க்கலாம் என்று நினைத்து, அதையும் செய்தோம். அப்போதும் எங்களுக்கு சரியான பதில் வரவில்லை.

    போலீஸும் முறையாக எப்.ஐ.ஆர் போடாமல் எங்களால் விசாரிக்க முடியாது, என்று சொல்லிவிட்டார்கள். அப்போது கூட இந்த தகவலை ஊடகங்களிடம் நான் தெரிவிக்கவில்லை. போலீஸில் புகார் அளிக்கும் போது, அங்கிருந்த நிருபர் ஒருவர் மூலமாக தான் செய்தியாக வெளியானது. பிறகு என்ன செய்வது என்று அப்பாவிடம் கேட்ட போது தான் வேறு வழியில்லை, எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டிய நிலை வந்தது. இப்போது எப்.ஐ.ஆர் பதிவு செய்துவிட்டோம். போலீஸ் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த காட்சிகள் வெளியானாலும், அதை ரசிகர்கள் நிராகரிக்க வேண்டும் என்பது தான் என் கோரிக்கை.

    காரணம், நூற்றுக்கணக்கானவர்களின் உழைப்பு அதில் இருக்கிறது. அந்த உழைப்பை நீங்கள் திரையில் வந்து பார்க்க வேண்டும், என்பது தான் என் ஆசை. அதற்காக தான் நான் இந்த அளவுக்கு உழைத்திருக்கிறேன். இது தான் இந்த பிரச்சனை. நான் குடும்ப பிரச்சனைப் பற்றி பேச விரும்பவில்லை. அனைத்து குடும்பத்திலும் பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. அது சரியாகி விடும். இன்று வரை எனது தம்பிக்கு என்ன பிரச்சனை, ஏன் அவர் இப்படி செய்கிறார், என்று தெரியவில்லை. தெரிந்தால் நிச்சயம் அதை சரி செய்ய நான் முயற்சிப்பேன்” என்று தெரிவித்துள்ளார் விஷ்ணு மஞ்சு.

    மோகன் பாபு தயாரிப்பில் விஷ்ணு மஞ்சு, பிரபாஸ், அக்‌ஷய் குமார், மோகன்லால், காஜல் அகர்வால், சரத்குமார் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கண்ணப்பா’. இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாத காரணத்தினால், படத்தின் வெளியீடு ஜூன் 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ’கண்ணப்பா’ படத்தின் பிரத்யேக காட்சிகள் திரையிடல் சென்னையில் நடைபெற்றது. இதில் விஷ்ணு மஞ்சுவுடன் படக்குழுவினர் சிலரும் கலந்துக் கொண்டார்கள்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    சினிமா

    ‘டெக்ஸாஸ் டைகர்’ படத்தில் ஹிருது ஹாருண்!

    July 1, 2025
    சினிமா

    சர்வதேச விழாக்களில் விருது வென்ற ‘மரியா’!

    July 1, 2025
    சினிமா

    ஆக. 1-ல் வெளியாகிறது ஜி.வி.பிரகாஷின் ‘பிளாக்மெயில்’!

    July 1, 2025
    சினிமா

    நடிகர் சிம்பு பட விவகாரம்: தனுஷ் அனுமதி தர மறுத்தாரா? – வெற்றிமாறன் விளக்கம்

    July 1, 2025
    சினிமா

    பழங்குடி பெண்ணாக ராஷ்மிகா மந்தனா!

    July 1, 2025
    சினிமா

    போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் கவுதம் ராம் கார்த்திக்!

    July 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அஜித்குமார் மரண வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
    • மனித பேச்சை சரியாகப் பிரதிபலிக்கும் 8 செல்லப்பிராணி பறவைகள்
    • தெலங்கானா ரசாயன ஆலை வெடிவிபத்து – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு
    • சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழப்பு 6-ஆக அதிகரிப்பு
    • ஆல் டே ப்ராஜெக்ட்ஸ் டார்சான் அறிமுகத்திலிருந்து கே-பாப் ஸ்டான்களிலிருந்து பின்னடைவை எதிர்கொள்கிறது: காட்சிகள் முதல் அதிர்வு வரை, ரசிகர்கள் அதை வாங்கவில்லை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.