நாட்டிங்காம்: இங்கிலாந்து – ஜிம்பாப்வே அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நேற்று தொடங்கியது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தது.
தனது 6-வது சதத்தை விளாசிய தொடக்க வீரரான பென் டக்கெட் 134 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 20 பவுண்டரிகளுடன் 140 ரன்கள் விளாசிய நிலையில் மாதவரே பந்தில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ஸாக் கிராவ்லி 145 பந்துகளில், 12 பவுண்டரிகளுடன் தனது 5-வது சதத்தை விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 231 ரன்கள் சேர்த்தது இங்கிலாந்து.
ஸாக் கிராவ்லி 171 பந்துகளில் 124 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 14 பவுண்டரிகளை அவர் விளாசினார். மறுமுனையில் ஆலி போப் 169 ரன்களுடன் களத்தில் உள்ளார். ஜோ ரூட், 34 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹாரி புரூக் 9 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 88 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 498 ரன்கள் எடுத்திருந்தது இங்கிலாந்து அணி.