‘காதல் ஊத்திக்கிச்சு’ என்ற சுயாதீன பாடலுக்குப் பிறகு ஸ்வான் ஸ்டூடியோஸ் தனது இரண்டாவது சிங்கிளான ‘போனாளே போனாளே’ என்ற வீடியோ பாடலை இப்போது உருவாக்கியுள்ளது.
நகைச்சுவையுடன் சிந்தனையை தூண்டும் விதமாக, காதல் முறிவுக்குப் பிறகான உணர்ச்சிகளை இந்த காதல் ‘பிரேக்- அப்’ பாடல் கொண்டுள்ளது. வரும் புதன்கிழமை ஸ்வான் ஸ்டூடியோஸ் யூடியூப் சேனலில் இப் பாடல் வெளியாகிறது. ஸ்பாட்டிஃபை, அமேசான் மியூசிக் உள்ளிட்ட இசை தொடர்பான இணையதளங்களிலும் இதைக் கேட்கலாம்.
இந்தப் பாடலை எழுதி இயக்கியுள்ளார் சந்தோஷ். அந்தோணி தாசன் பாடியுள்ளார். பிரியா துரை, ஜான் பிராங்க்ளின், கார்த்திகேயன் டிகே நடித்துள்ளனர். கீர்த்தன் இசை அமைத்துள்ளார். “நாங்கள் வெளியிட்ட முதல் பாடல் சிறந்த வரவேற்பைப் பெற்றது. மூன்று மாதத்துக்கு ஒரு முறை ஒரு பாடலை உருவாக்கி வெளியிட முடிவு செய்துள்ளோம். இதையடுத்து திரைப்படம் இயக்கும் முயற்சி இருக்கிறது. இந்தப் பாடலில், கடந்த காலம், நிகழ்காலம், கனவுக் காலங்களை மையமாகக் கொண்டு, கதாநாயகனைப் பற்றிய காட்சிகள் அமைந்துள்ளன. நாகேஷ் வி ஆச்சார்யா ஒளிப்பதிவு செய்துள்ளார். சுரேஷ் அர்ஸ் எடிட்டிங் செய்துள்ளார்” என்றார் சந்தோஷ்.