Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 2 மாதத்தில் 15 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கை
    கல்வி

    சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 2 மாதத்தில் 15 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கை

    adminBy adminMay 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 2 மாதத்தில் 15 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் கடந்த 2 மாதங்களில் 15,672 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

    சென்னை மாநகராட்சி கல்வி துறையின் கீழ், 206 தொடக்கப் பள்ளிகள், 130 நடுநிலை, 46 உயர்நிலை, 35 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 417 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    சென்னை மாநகராட்சி பள்ளிகளில், 2025-26-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கடந்த 2 மாதங்களில் மட்டும் 15,672 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

    இதுதொடர்பாக மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: மாநகராட்சிப் பள்ளிகளில் ஆண்டுதோறும் 1.12 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளிகளில் மார்ச் மாதத்துக்குப் பிறகு மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்த ஆண்டு மே 23-ம் தேதிக்குள் 15,672 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மழலையர் வகுப்புகளில் மட்டும் 8 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 2 மாதங்களில் இவ்வளவு மாணவர்கள் சேர்ந்துள்ளது இதுவே முதல்முறை. விஜயதசமி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும்.

    இந்த ஆண்டு 33 ஆயிரம் மாணவர்களைச் சேர்க்க ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். இதற்காக மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான சலுகைகள் குறித்தும், கல்வி தரம் மேம்பட்டிருப்பது குறித்தும், 45 ஆட்டோக்கள் வாயிலாக பொதுமக்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    மழலையர் வகுப்புகளில் காற்றோட்டமான வகுப்பறைகள், பச்சை வண்ணப் பலகைகள், ஸ்மார்ட் போர்டு, விளையாட்டுடன் கல்வியில் ஆர்வத்தைத் தூண்டும் வண்ணமயமான புத்தகங்கள் உள்ளிட்டவை உள்ளன. புத்தகப் பைகள், காலணிகள், அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன. பள்ளி சீருடைகள், எழுது பொருட்கள், பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், காலை சிற்றுண்டி, பள்ளிக்கு 100 சதவீதம் வருகை தந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, மாலை சிற்றுண்டியுடன், மாலைநேர சிறப்பு வகுப்புகள் உள்ளிட்டவை ஏற்படுத்தி தரப்படுகிறது.

    மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், கல்வித் தரத்தை மேம்படுத்தவும், விளையாட்டு மற்றும் தற்காப்பு கலைகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. போட்டித் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களை கல்வி சுற்றுலாவுக்கும் அழைத்து செல்கிறோம். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    ஆர்டிஇ திட்டத்தில் கல்விக் கட்டணம் செலுத்த தனியார் பள்ளிகள் நெருக்கடி – பெற்றோர்கள் தவிப்பு

    July 5, 2025
    கல்வி

    க்யூட் நுழைவு தேர்வுக்கான முடிவுகள் வெளியானது: 2,679 மாணவர்கள் சாதனை

    July 5, 2025
    கல்வி

    மாதம் ரூ.8,000 உதவித் தொகையுடன் தொல்லியல், கல்வெட்டியல் முதுகலை டிப்ளமா படிப்பு

    July 4, 2025
    கல்வி

    க்யூட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு: 2,679 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்று சாதனை!

    July 4, 2025
    கல்வி

    ஆங்கிலத்தில் வெளியான வழிகாட்டு நெறிமுறைகள் – ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’ என்ன ஆனது?

    July 4, 2025
    கல்வி

    வாசிப்பு இயக்க புத்தகங்களில் மாணவர் படைப்புகள்: விண்ணப்பிக்க ஜூலை 16-ம் தேதி கடைசி நாள்

    July 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பிரதமர் மோடிக்கு அர்ஜென்டினாவில் உற்சாக வரவேற்பு
    • அதிமுக சுற்றுப்பயணம்: லோகோ, கட்சிப் பாடலை வெளியிட்டார் இபிஎஸ்
    • ஒருவருக்கு கல்லீரல் போதைப்பொருள் தேவையில்லை என்று சிறந்த அமெரிக்க மருத்துவர் கூறுகிறார், தினமும் இந்த காய்கறிகளை சாப்பிடுவது வேலை செய்கிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்திய கடற்படையில் போர் விமானியாக பயிற்சி பெற்ற முதல் பெண் ஆஸ்தா பூனியா!
    • திமுகவுக்கு ஆதரவு எப்படி? – 3 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.