ஐபிஎல் 2025 தொடரின் 70வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
இரவு 7.30 மணிக்கு லக்னோவில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் இறங்கிய லக்னோ அணியின் மிட்செல் மார்ஷ் 37 பந்துகளில் 67 ரன்கள் விளாசினார். மறுமுனையில் ஆடிய மேத்யூ 14 ரன்களில் வெளியேறினார். அடுத்து இறங்கிய கேப்டன் ரிஷப் பந்த் 118 ரன்கள் எடுத்து அசத்தினார். நிக்கோலஸ் பூரன் 13, அப்துல் சமது 1 என 20 ஓவர் முடிவில் 227 ரன்கள் குவித்தது லக்னோ.
228 ரன் இலக்குடன் பேட்டிங் இறங்கிய ஆர்சிபி அணியின் ஃபில் சால்ட் 30 ரன்கள் அடித்தார். மறுமுனையில் விராட் கோலி அரை சதம் கடந்தார். ராஜத் பட்டிதார் 14, மயங்க் அகர்வால் 41 அடித்த நிலையில், அடுத்து இறங்கிய ஜிதேஷ் சர்மா 33 பந்துகளில் 85 ரன்கள் விளாசினார். 18.4வது ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்து போட்டியை முடித்தார். இப்படியாக 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தியது ஆர்சிபி. இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் குஜராத் அணியை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை அந்த அணி பிடித்துள்ளது.