லிங்கா, சாரா ஆச்சர் ஜோடியாக நடிக்கும் படம், ‘தாவுத்’. திலீபன், ராதாரவி, சாய் தீனா, ஸாரா, வையாபுரி, சரத்ரவி, அர்ஜெய், அபிஷேக் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதை டர்ம் புரொடக்ஷன் ஹவுஸ் சார்பில் எஸ்.உமா மகேஸ்வரி தயாரித்துள்ளார். சரத் வளையாபதி, பிரேண்டன் சுஷாந்த் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ராக்கேஷ் அம்பிகாபதி இசையமைத்துள்ளார்.
படத்தை இயக்கியுள்ள அறிமுக இயக்குநர் பிரசாந்த் ராமன் கூறும்போது, “இது கேங்ஸ்டர் படம்தான். வழக்கமான ஆக்ஷன், சேஸிங் ஏதும் இல்லாத காமெடி கலந்த கேங்ஸ்டர் படமாக இருக்கும். இதுவரை பார்த்திராத புது அனுபவத்தைத் தரக்கூடிய படமாகவும் இருக்கும். படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன” என்றார்.