Last Updated : 18 May, 2025 05:39 PM
Published : 18 May 2025 05:39 PM
Last Updated : 18 May 2025 05:39 PM

மும்பை: “என்னைப் பொறுத்தவரை பாகிஸ்தானைவிட நரகம் மேலானது. நான் நரகத்துக்கே செல்லவே விரும்புகிறேன்.” என பாலிவுட் பிரபலம் ஜாவேத் அக்தர் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் திரையுலகின் முன்னணி கதாசிரியரும் பாடலாசிரியருமான ஜாவேத் அக்தர் நேற்று ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த விழாவில் அவர் பேசுகையில், “ஒரு தரப்பினர் என்னை ‘காஃபிர்’ என்று கூறுகின்றனர். கடவுள் நம்பிக்கை இல்லாத நான் நிச்சயமாக நரகத்துக்கு செல்வேன் என்று அவர்கள் சாபமிடுகின்றனர். மற்றொரு தரப்பினர் என்னை ‘ஜிகாதி’ என்று விமர்சிக்கின்றனர். அவர்கள் என்னை பாகிஸ்தான் செல்லுமாறு கூறுகின்றனர்.
இருதரப்பினரும் சொல்வதன்படி எனக்கு 2 வாய்ப்புகள் உள்ளன. ஒன்று நான் நரகத்துக்கு செல்ல வேண்டும். இல்லையெனில் நான் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும். என்னைப் பொறுத்தவரை பாகிஸ்தானைவிட நரகம் மேலானது. நான் நரகத்துக்கே செல்ல விரும்புகிறேன். என்னுடைய 19-வது வயதில் மும்பைக்கு வந்தேன். மும்பை என்னை வாழ வைத்தது. ஒருபோதும் நான் அந்த நன்றியை மறக்க மாட்டேன்.” என்றார்.
FOLLOW US
தவறவிடாதீர்!