சென்னை: கடற்கரை யார்டில் நடைமேம்பாலம் பணி நடைபெறுவதால், சென்னை கடற்கரை – வேளச்சேரி, அரக்கோணம் வழித் தடத்தில் சில புறநகர் மின்சார ரயில் சேவை இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே, சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை கடற்கரை யார்டில் நடைமேம்பாலம் பணி நடைபெறுவதால், கடற்கரை – வேளச்சேரி, அரக்கோணம் வழித் தடத்தில் சில புறநகர் மின்சார ரயில் சேவை இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன்படி, வேளச்சேரி – கடற்கரை இடையே இரவு 9, 9.40, 10.20 மற்றும் கடற்கரை – வேளச்சேரி இடையே இரவு 10.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சேவை இன்று (17-ம் தேதி) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல், கடற்கரை – வேளச்சேரி இடையே காலை 5, 5.30, 6, 6.30, 7.05, 7.25, 7.45 மற்றும் வேளச்சேரி – கடற்கரை இடையே காலை 5, 5.30, 6, 6.15, 6.35 மற்றும் 6.55 மணிக்கு இயக்கப்படும் ரயில் சேவைகள் நாளை (18-ம் தேதி) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. எனினும், பயணிகளின் வசதிக்காக வேளச்சேரி – கடற்கரை இடையே 5, 5.30, 6, 6.35 மற்றும் 7 மணிக்கும், சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே காலை 6, 6.30, 7, 7.35, 8 மணிக்கு நாளை சிறப்பு ரயில் இயக்கப்படும்.
மேலும், சென்னை கடற்கரையில் இருந்து ஆவடிக்கு காலை 4.05, திருவள்ளூருக்கு 5.10, 5.40, 6.10 மற்றும் ஆவடியில் இருந்து கடற்கரைக்கு காலை 4.35, 5.40, 7.05 மணிக்கு இயக்கப்படும் ரயில் சேவைகள் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
எனினும், பயணிகளின் வசதிக்காக ஆவடியில் இருந்து அரக்கோணத்துக்கு காலை 5, ஆவடியில் இருந்து திருவள்ளூருக்கு காலை 6, 6.45 மற்றும் 7.05 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.
சென்னை கடற்கரையில் இருந்து பொன்னேரிக்கு காலை 5.40 மணிக்கு இயக்கப்படும் ரயில் நாளை பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். கும்மிடிப்பூண்டி-சென்னை கடற்கரை இடையே இரவு 8.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் இன்று பேசின் பிரிட்ஜ் வரை மட்டுமே இயக்கப்படும். பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்-சென்னை கடற்கரை இடையே இரவு 8.25 மணிக்கு இயக்கப்படும் ரயில் சேவை இன்று ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.