Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»பாகிஸ்தானுடனான போர் நிறுத்தத்துக்கு பின் காஷ்மீருக்கு சுற்றுலா பயணிகளை ஈர்க்க சிறப்பு திட்டம்: உமர் அப்துல்லா
    தேசியம்

    பாகிஸ்தானுடனான போர் நிறுத்தத்துக்கு பின் காஷ்மீருக்கு சுற்றுலா பயணிகளை ஈர்க்க சிறப்பு திட்டம்: உமர் அப்துல்லா

    adminBy adminMay 16, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பாகிஸ்தானுடனான போர் நிறுத்தத்துக்கு பின் காஷ்மீருக்கு சுற்றுலா பயணிகளை ஈர்க்க சிறப்பு திட்டம்: உமர் அப்துல்லா
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: ​காஷ்மீரின் பஹல்​காமில் கடந்த ஏப்​ரல் 22-ம் தேதி தீவிர​வா​தி​கள் தாக்​குதலில் 26 சுற்​றுலா பயணி​கள் உயி​ரிழந்​தனர், இது காஷ்மீரின் சுற்​றுலா துறைக்கு மிகப் பெரிய இழப்பை ஏற்​படுத்​தி​யது. அதன்​பின் காஷ்மீர் செல்ல வேண்​டாம் என்று அமெரிக்கா உட்பட சில நாடு​கள் தங்​கள் நாட்டு மக்​களுக்கு அறி​வுறுத்​தி​யது.

    இதனால் பெரும்​பாலான உணவு மற்​றும் தங்​கும் விடு​தி​கள், விருந்​தினர் மாளி​கைகள் மற்​றும் படகு வீடு​கள் காலி​யாகி​விட்​டன. அனைத்து வகை தங்​கும் விடு​தி​களில் சுமார் 12 லட்​சம் முன்​ப​திவு​கள் ரத்து செய்​யப்​பட்​டன.

    அதன்​பின் இந்​தியா – பாகிஸ்​தான் மோதல் பதற்​றத்தை மேலும் அதி​கரித்​தது. எனினும் போர் நிறுத்​தம் அறிவிக்​கப்​பட்டு காஷ்மீரில் விமானப் போக்​கு​வரத்து மீண்​டும் தொடங்​கப்​பட்​டுள்​ளது. இதனால் ஜம்மு காஷ்மீர் மக்​கள், சுற்​றுலா துறை​யுடன் தொடர்​புடைய​வர்​கள் நிம்​மதி பெரு​மூச்சு விட தொடங்​கி​யுள்​ளர். தற்​போது பதற்​றம் தணிந்​துள்​ள​தால் சுற்​றுலா பயணி​கள் மீண்​டும் காஷ்மீருக்கு அதிக எண்​ணிக்​கை​யில் வரு​வார்​கள் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

    இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் ஜம்மு காஷ்மீர் ஓட்​டல் உரிமை​யாளர்​கள் சங்க தலை​வர் முஷ்​தாக் அகமது சாயா கூறும்​போது, “வரும் நாட்​களில் சுற்​றுலா பயணி​கள் கணிச​மான எண்​ணிக்​கை​யில் வரு​வார்​கள். நாடு முழு​வதும் உள்ள பல சுற்​றுலா நிறு​வனங்​கள் ஏற்​கெனவே எங்​களு​டன் தொடர்​பில் உள்​ளனர்.

    இவர்​கள் மீண்​டும் புதிய முன்​ப​திவு​களை செய்ய தொடங்கி விட்​டனர். காஷ்மீரில் சுற்​றுலா நடவடிக்​கைகள் படிப்​படி​யாக இயல்பு நிலைக்​குத் திரும்​பும். சுற்​றுலா பயணி​களை வரவேற்க நாங்​கள் தயா​ராக உள்​ளோம். வரும் நாட்​களில் சுற்​றுலா பயணி​களுக்கு சிறப்பு தள்​ளு​படிகளை வழங்​கு​வோம், இதற்​கான ஒரு சிறப்பு திட்​டத்தை முதல்​வர் உமர் அப்​துல்லா அறிவிக்க உள்​ளார்” என்​றார்.

    இதற்​கிடை​யில், காஷ்மீரில் வர்த்​தகம் மற்​றும் தொழில் துறை சபை சார்​பில் தொழில் துறை பங்​கு​தா​ரர்​களின் அவசர கூட்​டம் நகரில் நடை​பெற்​றது. இதுகுறித்து தொழில் துறை சபை​யின் ஜம்மு காஷ்மீர் மாநில தலை​வர் தாரிக் கனி கூறும்​போது, “சு​மார் 20 லட்​சம் பேர் இந்த தொழிலுடன் நேரடி​யாகவோ அல்​லது மறை​முக​மாகவோ இணைந்​துள்​ளனர்.

    எனவே, சுற்​றுலா துறையை மீட்​டெடுக்க சுற்​றுலா மற்​றும் பயண முகவர்​கள் மற்​றும் பிற தொடர்​புடைய துறை​களு​டன் இணைந்து புதிய உத்​தி​களை உரு​வாக்கி வரு​கிறோம். வரும் நாட்​களில் அடுத்த கட்ட நடவடிக்​கைகள் குறித்து வி​வா​திக்க பிரதமர் மோடி மற்​றும் உள்​துறை அமைச்​சர்​ அமித்​ ஷாவை​யும்​ சந்​திப்​போம்​” என்​றார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ‘வரிவிதிப்பு விவகாரத்தில் ட்ரம்ப்பிடம் மோடி அடிபணிவாரா?’ – ராகுல் காந்திக்கு பியூஷ் கோயல் பதில்

    July 5, 2025
    தேசியம்

    20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மராத்தி’யால் ஒன்றிணைந்த உத்தவ் – ராஜ் தாக்கரே: பின்னணி என்ன?

    July 5, 2025
    தேசியம்

    வர்த்தக ஒப்பந்தத்துக்கான ட்ரம்ப்பின் காலக்கெடுவுக்கு மோடி பணிவார்: ராகுல் காந்தி

    July 5, 2025
    தேசியம்

    இந்திய கடற்படையில் போர் விமானியாக பயிற்சி பெற்ற முதல் பெண் ஆஸ்தா பூனியா!

    July 5, 2025
    தேசியம்

    ட்ரோன், மோப்ப நாய் உதவியுடன் காஷ்மீர் கிஸ்த்வர் காடுகளில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை

    July 5, 2025
    தேசியம்

    கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ்? – 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

    July 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • விடுபட்டோருக்கு மகளிர் உரிமைத் தொகை: ஜூலை 15-ல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் தொடக்கம்
    • பெண்களுக்கு 5 சிறந்த குடல் நட்பு உணவுகள்
    • ‘வரிவிதிப்பு விவகாரத்தில் ட்ரம்ப்பிடம் மோடி அடிபணிவாரா?’ – ராகுல் காந்திக்கு பியூஷ் கோயல் பதில்
    • திமுக, பாஜகவுக்கு எதிராக தவெக தலைமையில் கூட்டணி – செயற்குழுக் கூட்டத்தில் விஜய் உறுதி
    • 12 நாடுகளுக்கான வரி கடிதத்தில் கையெழுத்து போட்டுவிட்டேன்: டொனால்ட் ட்ரம்ப்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.