விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘மார்கன்’ திரைப்படம் ஜூன் 27-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மார்கன்’. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. தற்போது இப்படம் ஜூன் 27-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமைகள் ஏற்கெனவே விற்கப்பட்டுவிட்டன.
முன்னணி எடிட்டராக இருந்த லியோ ஜான் பால் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘மார்கன்’. இப்படம் மர்மம் கலந்த குற்றவியல் த்ரில்லராக உருவாகியுள்ளது. விஜய் ஆண்டனியின் சித்தப்பா மகன் அஜய் திஷான் வில்லனாக அறிமுகமாகும் படம் இது. மேலும் சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிரித்திகா, வினோத் சாகர் உள்ளிட்ட பலர் இதில் விஜய் ஆண்டனியுடன் நடித்துள்ளனர்.
இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக யுவா, கலை இயக்குநராக ராஜா, இசையமைப்பாளராக விஜய் ஆண்டனி ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். தற்போது இதன் தமிழக விநியோக வியாபாரம் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் ட்ரெய்லரை வெளியிட்டு படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளை தொடங்கவுள்ளது படக்குழு.
#MAARGAN – Releasing in theatres June 27 @leojohnpaultw @AJDhishan990 @vijayantonyfilm @mrsvijayantony pic.twitter.com/FJ1EwZpY2m
— vijayantony (@vijayantony) May 14, 2025