சென்னை: டிஎன்பிஎஸ்சி மூலம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் பல்வேறு பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வாயிலாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய பதவிகளுக்கு 174 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
சென்னை கிண்டி ஐடிஐ-யில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 174 பேருக்கும், கருணை அடிப்படையில் 7 பேருக்கும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் பணிநியமன ஆணைகளை வழங்கினார். மேலும், 2023-24-ம் ஆண்டில் சிறப்பாக பணியாற்றிய அரசு ஐடிஐ முதல்வர்கள் உட்பட 12 அலுவலர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுகளையும் அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், தொழிலாளர் நலத்துறை செயலர் கொ.வீரராகவ ராவ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் பா.விஷ்ணு சந்திரன் மற்றும் துறையின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.