Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, January 16
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»விளையாட்டு»ஓர் இடி முழக்க சகாப்தம்: விராட் கோலியை கிரெக் சாப்பல் போற்றுவது ஏன்?
    விளையாட்டு

    ஓர் இடி முழக்க சகாப்தம்: விராட் கோலியை கிரெக் சாப்பல் போற்றுவது ஏன்?

    adminBy adminMay 13, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஓர் இடி முழக்க சகாப்தம்: விராட் கோலியை கிரெக் சாப்பல் போற்றுவது ஏன்?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வு பெறுவது ஓர் இடி முழக்கம் போன்ற சகாப்தத்தைக் குறிக்கிறது என்றும், அவருடைய காலக்கட்டம் மன உறுதி, தீரம் மற்றும் துணிச்சலால் நிரம்பியது என்றும் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும், இந்திய முன்னாள் பயிற்சியாளருமான கிரெக் சாப்பல் வானளாவ புகழ்ந்துள்ளார்.

    ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்தில் அவர் எழுதிய பத்தி ஒன்றில் அவர் எழுதியதில் இருந்து சில பகுதிகள் இதோ: விராட் கோலியின் ஓய்வு சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு இந்திய கிரிக்கெட்டையே உருமாற்றம் செய்த ஓர் ஆளுமையின் அத்தியாயத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. ஆனால் ஓய்வறை, கிரிக்கெட் களச் செயல்பாடு என்று கிரிக்கெட் கலாச்சாரத்தையே மாற்றியதில் சச்சின் டெண்டுல்கரையும் கடந்து விஞ்சி நிற்பவர் விராட் கோலி.

    விராட் கோலி ஒரு தசாப்தத்துக்கும் மேலாக இந்திய கிரிக்கெட்டின் ஒளியும் உஷ்ணமும் நிறைந்த இருதயமாகத் திகழ்ந்தார். அவர் வெறுமனே ரன்களை மட்டும் குவிக்கவில்லை. எதிர்பார்ப்புகளுக்கு மறுவிளக்கமளிப்பது போன்றது அவரது கிரிக்கெட் வாழ்வு. மரபுகளை கேள்விக்குட்படுத்தினார்.

    21-ம் நூற்றாண்டின் சுய உறுதிப்பாடுடைய இந்தியாவின் குறியீடாகத் திகழ்கிறார். அவரது ஓய்வு புள்ளி விவரங்களில் சூன்யத்தை ஏற்படுத்துவதோடு ஆற்றல் மட்டத்தில் ஒரு பூகம்ப மாற்றத்தை ஏற்படுத்தும். ஏனெனில் அவரைப் போன்ற இன்னொருவர் இனி இந்திய அணிக்கு வருவது கடினம்.

    அயல்நாடுகளில் இந்திய கிரிக்கெட் மரியாதைக்குரிய அடிபணிதலோடு ஆடிய காலக்கட்டம் இருந்தது. நல்ல உத்திகளுடன் திறமையுடன் ஆடுவார்கள், ஆனால் உளவியல் ரீதியாக தாழ்வு மனப்பான்மை இருந்து வந்தது. இந்த மனப்பான்மை படிப்படியாக மாறியது, முதலில் கங்குலி இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு புதிய முதுகெலும்பைக் கொடுத்தார். எம்.எஸ்.தோனி ஓர் உணர்வு ரீதியாக ஒரு தொடர்பற்ற ஒரு தொழில்பூர்வ தலைமைத்துவத்தில் வெள்ளைப்பந்தில் இந்திய கிரிக்கெட்டை ஆதிக்க நிலைக்குக் கொண்டு வந்தார்.

    ஆனால் கோலி? கோலிதான் தீயை மூட்டினார். பழைய நூலைக் கிழித்து புது நூலை எழுதிய ஆசிரியராகத் திகழ்ந்தார். இவர் தலைமையில்தான் இந்திய அணி அன்னிய மண்ணில் சவாலாக மட்டும் திகழ்வதோடு நின்று போகாமல் வெற்றி பெறும் எதிர்பார்ப்பை வழங்கியது. ஆஸ்திரேலியர் அல்லாத ஆஸ்திரேலியர் என்றால் அது விராட் கோலிதான். வெள்ளை உடையில் நாங்கள் இதுவரை கண்டிராத போர் வீரன் விராட். ஓர் அங்குலம் கூட விட்டுக் கொடுக்காதவர்.

    கோலியின் பாரம்பரியம் என்று பேசப்படும் அளவுக்கு இரண்டு தொடர்கள் அவரை வரையறுத்தன. அவரது ஆளுமை கிரிக்கெட்டின் பாரம்பரிய மகத்துவம் நிரம்பிய இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் ஒரு பெரிய குணாம்சமாக வெளிப்பட்டது. 2014-ல் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் அவரை தன் லேட் ஸ்விங்கினால் பலவீனங்களை அம்பலப்படுத்தினார், ஆனால் கோலிக்குத் தோல்வி என்பது உரம் போன்றது. அவர் துவளவில்லை, தன் யு-19 பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புத்தை அணுகினார். உத்தி ரீதியான பழுதுகளை நீக்கினார். சச்சின் டெண்டுல்கரும் உதவினார். 4 ஆண்டுகளுக்குப் பிறகு இவற்றின் பலனால் ஒரு கிரேட் பேட்டர் மட்டுமல்ல ஒரு சிறந்த மனிதராகவும் கோலி உருவெடுத்தார்.

    இங்கிலாந்துக்கு அவர் 2018-ல் வந்தது மீட்புப் புராணம் என்றே கூற வேண்டும். எட்ஜ்பாஸ்டனில் முதல் டெஸ்ட் போட்டியில் கோலி உன்னதமான 149 ரன்களை எடுத்தார். ஒரு முறை அவரது பொறுமை, உத்தி ஆகியவற்றிற்கு சோதனைக் களமாக இருந்ததை தனக்கு லாவகமாக மாற்றினார். இதே டெஸ்ட்டில் இரண்டாவது இன்னிங்ஸில் எடுத்த 50 ரன்களையும் குறைத்து மதிப்பிட முடியாது. 5 டெஸ்ட் போட்டிகளில் 593 ரன்களை குவித்தார். 59.30 சராசரி. 2018-19-ல் கோலி ஆஸ்திரேலியாவுக்கு கேப்டனாக வந்தார்.

    தங்களால் வெற்றியைச் சாதிக்க முடியும் என்று நம்பிய அணியுடன் வந்தார் வென்றார். புஜாராதான் அந்தத் தொடரின் ஹீரோ என்றாலும் பெர்த்த் போன்ற அரக்கத்தனமான பிட்சில் கோலி எடுத்த 123 ரன்கள் பல யுகங்களுக்கும் மறையாத ஒரு இன்னிங்ஸ். இந்தியா 2-1 என்று தொடரை வென்றது. காலங்காலமாக இருந்து வந்த தாழ்வு மனப்பான்மையைக் குழிதோண்டிப் புதைத்தார் விராட் கோலி.

    இதுவரை எந்த இந்திய கேப்டனும் ஓர் அணியை இவ்வளவு வலுவான வெளிநாட்டு ஆதிக்கத்திற்கு வழிநடத்தியதில்லை. டெண்டுல்கருக்குப் பிறகு, ஒவ்வொரு கண்டத்திலும் இவ்வளவு தெளிவாக ஆதிக்கம் செலுத்திய வேறு பேட்ஸ்மேன் கோலியைத் தவிர வேறு எவரும் இல்லை. கோலியின் கிரேட்டஸ்ட் இன்னிங்ஸ் ரன்களை விடவும் உன்னதமானது. அடிலெய்டில் மிகப்பெரிய (350க்கும் மேலான) இலக்கை விரட்டியதில் கோலியின் ஆரம்ப கால திட்ட வரைபடம் கண்ணுக்குத் தெரிந்தது.

    சென்சூரியனில் எடுத்த 153, 2016-ல் வெஸ்ட் இண்டீஸில் எடுத்த 200, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 254 என்று அவரது திறமைகளின் கதைகள் கிளைபரத்தி வானுயர வளர்ந்தது. அவர் ரிவர்ஸ் ஸ்கூப், ரிவர்ஸ் ஸ்வீப் போன்ற புதுமைகள் இன்றியே மரபான கிரிக்கெட் ஆட்ட உத்தியிலேயே டென்னிஸ் போன்ற ஆக்ரோஷத்தை அவரால் காட்ட முடியும், டைமிங், ஸ்ட்ரெய்ட் பேட் என்று அவர் ஆதிக்கம் அமைந்தது…

    அவர் தவறுகள் இழைத்தார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்தவுடன் வாழ்க்கை முறையில் கட்டுக்கோப்பாக இருந்தார். தனக்குத்தானே மிகவும் நேர்மையாக இருந்தார். டயட், ட்ரெய்னிங், மனநிலை என்று தெளிவுக்குத் திரும்பினார். இவற்றையெல்லாம் அவர் விடாப்பிடியாகக் கடைபிடித்து தொழில்முறையாகவும் உடல் தகுதியின்றி வேறெதுவும் இல்லை என்ற ஒரு வற்புறுத்தலான பயிற்சி, இரும்பு மனம் என்று கோலி நவீன இந்திய கிரிக்கெட் வீரருக்கான மாதிரி வரைபடமாக மாறினார்…

    ஆம். சச்சின் டெண்டுல்கர் ஒரு ஜீனியஸ், ஆம் தோனி ஒரு பெரிய தந்திரோபாயக்காரர், கூல் பினிஷர். ஆனால் இந்திய கிரிக்கெட் வரலாற்றின் மகத்தான அங்கீகாரத்தில் கோலிதான் செல்வாக்கு மிக்க வீரராகத் திகழ்கிறார். ஏன் என்றால், அவர் ஆட்டத்தின் முடிவுகளை மட்டும் மாற்றவில்லை, மனநிலைகளை மாற்றியவர்.

    கிங் கோலி என்ற வார்த்தையின் ஒவ்வொரு அர்த்தத்திலும் அவர் ஆட்சி செலுத்தினார். அவரது கர்ஜனை ஓய்ந்த பிறகும் நீண்ட காலத்திற்கு உணரப்படும். அனைவரும் கிங் கோலியை புகழ்கின்றனர். ஆதிக்கமும், கவுரவமும் ஒருங்கே நடக்க முடியும் என்று எங்களுக்கெல்லாம் நம்பிக்கை ஊட்டியதற்காக மிக்க நன்றி விராட் என்று அந்தப் பத்தியில் கிரெக் சாப்பல் தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    விளையாட்டு

    528 பந்துகளில் 1,000 ரன்கள்: அபிஷேக் சர்மா அசத்தல் சாதனை!

    December 3, 2025
    விளையாட்டு

    தென் ஆப்பிரிக்கா உடனான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது பாகிஸ்தான் அணி!

    December 3, 2025
    விளையாட்டு

    உலக துப்பாக்கி சுடுதலில்: தங்கம் வென்றார் ரவீந்தர்

    December 3, 2025
    விளையாட்டு

    ரஞ்சி கோப்பையில் தமிழகம் 182 ரன்களுக்கு சுருண்டது

    December 3, 2025
    விளையாட்டு

    என்எஸ்டபிள்யூ ஓபன் ஸ்கு​வாஷ் இறுதிப் போட்டியில் ராதிகா சீலன்

    December 3, 2025
    விளையாட்டு

    91-வது கிராண்ட் மாஸ்டரானார் சென்னையை சேர்ந்த ராகுல்

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • உங்கள் வாஷிங் மெஷின் மற்றும் ட்ரையரை குறைந்த கட்டணம் மற்றும் சிறந்த ஆற்றல் பயன்பாட்டிற்கு இயக்க இதுவே சிறந்த நேரம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தொழில்முனைவோர், குறிப்புகளை எடுத்துக் கொள்ளுங்கள்: வணிக வெற்றிக்காக எலோன் மஸ்க் சத்தியம் செய்யும் 5 பழக்கங்கள்
    • ‘எனக்கு போதுமான திறமை உள்ளது’: கனடாவில் பணிநீக்கம் செய்யப்பட்ட நபர் டிக்டோக்கில் ‘இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள்’ என்று பதிலளித்தார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • உங்கள் பிளாஸ்டிக் கொள்கலன்களில் இருந்து லேபிள்களை அகற்ற இது எளிதான வழி | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சீனாவின் பெரிய நகரங்கள் ‘பிளாஸ்டிக் மேகங்களின்’ கீழ் வாழ்கின்றன; விஞ்ஞானிகள் எச்சரிக்கை | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.