Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»சினிமா»‘ஒரு நொடி’ டீமின் ‘ஜென்ம நட்சத்திரம்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
    சினிமா

    ‘ஒரு நொடி’ டீமின் ‘ஜென்ம நட்சத்திரம்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    adminBy adminMay 10, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘ஒரு நொடி’ டீமின் ‘ஜென்ம நட்சத்திரம்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ‘ஒரு நொடி’ படக்குழுவினரின் அடுத்த படமான ‘ஜென்ம நட்சத்திரம்’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. 2024-ம் ஆண்டு வெளியான படம் ‘ஒரு நொடி’. இப்படம் திரையரங்குகளில் பெரிதாக கொண்டாடப்படவில்லை என்றாலும், ஓடிடி தளத்தில் கொண்டாடப்பட்டது. இந்த வரவேற்பை முன்வைத்து அடுத்த படத்தையும் தொடங்கினார்கள். இதன் படப்பிடிப்பை முடித்து ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

    ஹாரர் த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இப்படத்துக்கு ‘ஜென்ம நட்சத்திரம்’ எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. இந்த தலைப்பை மாலை 6 மணி, 6 நிமிடங்கள், 6 நொடிக்கு வெளியிட்டார்கள். இப்படம் குறித்து இயக்குநர் பி.மணிவர்மன், “முந்தைய ‘ஜென்ம நட்சத்திரம்’ போன்றே இந்தப் படமும் பேசும்படியாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படத்துக்கான தலைப்பு அதன் நிஜ ஹாரர் படத்தில் இருந்தே பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம். ஆனால், படத்தின் கதை மிகவும் வித்தியாசமாகவும், திரைக்கதையை தனித்துவமாகவும் அமைத்து இருக்கிறோம்.

    இந்தப் படத்தை பார்க்கும்போது இரு படங்களுக்கும் இடையில் உள்ள இணைப்பை ரசிகர்கள் திரையரங்குகளில் ரசிக்க முடியும். படத்தில் உள்ள சக்திவாய்ந்த 666 தன்மையை எடுத்துரைக்கும் வகையில் தான் இந்தப் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவற்றை சரியாக மாலை 6.06.06 மணிக்கு வெளியிட்டு இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

    இந்தப் படத்தை அமோஹம் ஸ்டூடியோஸ் மற்றும் ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. ஒளிப்பதிவாளராக கே.ஜி, இசையமைப்பாளராக சஞ்சய் மாணிக்கம் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இதில் தமன் அக்‌ஷன், மால்வி மல்ஹோத்ரா, மைத்ரேயா, ரக்‌ஷா செரின், சிவம், அருண் கார்த்தி, காளி வெங்கட், முனிஸ்காந்த், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

    ‘ஜென்ம நட்சத்திரம்’ படத்தினை உலகமெங்கும் வெளியிடும் உரிமையினை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் கைப்பற்றி இருக்கிறார். இவர் சமீபத்தில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘கோட்’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ படத்தினை தமிழகத்தில் வெளியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    சினிமா

    பாலா ஹீரோவாக அறிமுகமாகும் ‘காந்தி கண்ணாடி’  – ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

    June 30, 2025
    சினிமா

    தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் Vs ஃபெப்சி: மத்தியஸ்தரை நியமிக்க ஐகோர்ட் முடிவு

    June 30, 2025
    சினிமா

    ‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல் – இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்

    June 30, 2025
    சினிமா

    ‘நூறு நாள் திரைப்படம் 3’ – பிரதீப் ரங்கநாதன் மகிழ்ச்சி

    June 30, 2025
    சினிமா

    ‘திடீரென பேய் வரும், திடுக்கிட மாட்டீர்கள்!’ – அவசரக் கல்யாணம்

    June 30, 2025
    சினிமா

    கார்த்தியை ஆச்சரியப்பட வைத்த விஷ்ணு விஷால்!

    June 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘அஜித்குமார் மரணத்துக்கு காரணமானோரை கைது செய்யாதது ஏன்?’ – தமிழக பாஜக சரமாரி கேள்வி
    • ரயில் கட்டண உயர்வு, தட்கல் டிக்கெட், ஆதார் – பான் இணைப்பு: ஜூலை 1 முதல் வரப்போகும் மாற்றங்கள் என்ன?
    • கூர்மையான மூளை முதல் எடை இழப்பு வரை: சர்க்கரையை விட்டு வெளியேறுவதன் 5 அற்புதமான நன்மைகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பூவை ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு!
    • ஒரு நாய் கடித்த பிறகு என்ன செய்ய வேண்டும்: நீங்கள் பின்பற்றக்கூடிய அத்தியாவசிய உதவிக்குறிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.