Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, December 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»சினிமா»கரையான் அரித்த பணம்: ஏழைப் பெண்ணுக்கு ரூ.1 லட்சம் வழங்கிய ராகவா லாரன்ஸ்
    சினிமா

    கரையான் அரித்த பணம்: ஏழைப் பெண்ணுக்கு ரூ.1 லட்சம் வழங்கிய ராகவா லாரன்ஸ்

    adminBy adminMay 8, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கரையான் அரித்த பணம்: ஏழைப் பெண்ணுக்கு ரூ.1 லட்சம் வழங்கிய ராகவா லாரன்ஸ்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சிவகங்கை அருகே கூலித்தொழிலாளி பெண்ணின் சேமிப்பு பணத்தை கரையான் அரித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், அப்பெண்ணுக்கு ரூ.1 லட்சத்தை நடிகர் ராகவா லாரன்ஸ் வழங்கியிருக்கிறார்.

    சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே உள்ள சுக்கனாம்பட்டியைச் சேர்ந்த தம்பதி குமார் – முத்துக்கருப்பி. கூலித் தொழிலாளர்களான இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், தங்களது மகள்களின் காதணி விழாவுக்காக முத்துக்கருப்பி, சிறுக சிறுக பணம் சேர்த்து வந்தார். அந்த சேமிப்பை தகரத்திலான உண்டியலில் சேமித்து வைத்த அவர், வீட்டிலேயை குழிதோண்டி அந்த உண்டியலைப் புதைத்து பராமரித்து வந்துள்ளார்.

    சில மாதங்களுக்கு முன்பு, அந்த சேமிப்புத் தொகை ரூ.1 லட்சத்தை எட்டியிருந்ததை எண்ணிப்பார்த்து தெரிந்துகொண்ட அவர் மீண்டும் அந்த உண்டியலை புதைத்து வைத்துள்ளார். பின்னர், அப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக, அந்த தகர உண்டியலுக்குள் கரையான்கள் புகுந்து ரூபாய் நோட்டுக்களை அரித்துள்ளன. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த தகர உண்டியலை முத்துக்கருப்பி திறந்து பார்த்தபோது, அந்த பெட்டியில் இருந்து சேமிப்பு பணம் முழுவதையும் கரையான்கள் அரித்திருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

    இதனால், செய்வதறியாது திகைத்த முத்துக்கருப்பி, கரையான் அரித்த ரூபாய் நோட்டுக்களுடன் தனது குழந்தைகளுடன் அழுது புலம்பும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலானது. இச்சம்பவம் குறித்து அறிந்த சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள், கரையான் அரித்த நோட்டுக்களை ரிசர்வ் வங்கி மூலம் மாற்றித் தருவதற்கான பரிந்துரைகளை வங்கி மூலம் செய்திருந்தனர்.

    இந்த நிலையில், நடிகர் ராகவா லாரனஸ், குமார் – முத்துக்கருப்பி தம்பதியை சென்னையில் உள்ள தனது இல்லத்துக்கு வரவழைத்து, ஒரு லட்சம் ரூபாயைக் கொடுத்துள்ளார். இந்த காணொளியை அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஒரு லட்சம் ரூபாயைப் பெற்றுக் கொண்ட அந்த தம்பதி, கண்ணீர் மல்க ராகவா லாரன்ஸுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இக்காணொளியை சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு, நடிகர் ராகவா லாரன்ஸுக்கு பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

    Hi Everyone, I came across the news that a coolie family lost 1lakh of their many years of savings due to termites. My heart sank thinking about what they must’ve gone through. So, I’m happy to contribute the lost money for them. Thanks to the media and people involved in… pic.twitter.com/Rmhv3VNBNV


    — Raghava Lawrence (@offl_Lawrence) May 8, 2025



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    சினிமா

    “எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை” – இயக்குநர் ராஜமவுலி பகிர்வு!

    December 1, 2025
    சினிமா

    விஜய் சேதுபதி படத்துக்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்

    December 1, 2025
    சினிமா

    ‘வாரணாசி’ கிராபிக்ஸ் காளை vs ‘மருதநாயகம்’ ஒரிஜினல் காளை – இணையத்தில் கிளம்பிய விவாதம்!

    December 1, 2025
    சினிமா

    ‘லப்பர் பந்து’ தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பு தொடக்கம்: நடிகர்கள் விவரம்

    December 1, 2025
    சினிமா

    ‘கன்டென்ட்’ கொடுத்தும் எவிக்‌ஷன்… திவாகரின் திடீர் வெளியேற்றம் உணர்த்துவது என்ன? | Bigg Boss Tamil 9 Analysis

    December 1, 2025
    சினிமா

    மெட்ரோ சிரிஷின் ‘நான் வயலன்ஸ்’ படத்தில் ஸ்ரேயா!

    December 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஏஐ போலி வீடியோவை தடுக்க டென்மார்க்கில் புதிய சட்டம்
    • சூரசம்ஹாரத்தை முன்னிட்டு பழநி முருகன் கோயிலில் ‘தண்டு விரதம்’ இருந்து பக்தர்கள் வழிபாடு
    • “எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை” – இயக்குநர் ராஜமவுலி பகிர்வு!
    • சென்னையில் பெருமழை அச்சத்தில் இருந்து மக்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ராமதாஸ் வலியுறுத்தல்
    • தூத்துக்குடியில் நடப்பாண்டில் 19 லட்சம் டன் உப்பு உற்பத்தி: விலை குறைவால் உப்பளங்களில் தேக்கம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.