திருப்பூர்: ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு முழு ஆதரவை தெரிவிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் நாராயணா கூறினார். கட்சியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநிலக் குழு கூட்டம் திருப்பூரில் நேற்று நடைபெற்றது. தேசியச் செயலாளர் நாராயணா தலைமை வகித்தார்.
மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், கே.சுப்பராயன் எம்.பி. முன்னிலை வகித்தனா். மாநில துணைச் செயலாளா் பொியசாமி, வீரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர், தேசியச் செயலாளர் நாராயணா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு முழு ஆதரவை தொிவித்துக் கொள்கிறோம். தீவிரவாதத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோல, இந்தியா-பாகிஸ்தான் போரையும் ஏற்க மாட்டோம். போர் ஏற்பட்டால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். பாகிஸ்தான் மக்கள் மற்றும் ராணுவத்தினர் மீது தாக்குதல் இல்லாமல், தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது வரவேற்கத்தக்கது.
அதேநேரத்தில், பாஜக மக்கள் நல விரோதச் செயல்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்கிறது. மதச் சார்ப்பின்மைக்கு எதிராக தொடா்ந்து செயல்படுகிறது. மக்கள் விரோதக் கொள்கைக்கு எதிராக செயல்படுவதால், நாங்கள் அவர்களுக்கு எதிராக தொடா்ந்து குரல் கொடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். இந்தக் கூட்டத்தில், பல்வேறு மாவட்டங்களை சோ்ந்த நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
தருமபுரி நிர்வாகி உயிரிழப்பு: இதற்கிடையே, கூட்டத்தின் உணவு இடைவேளையின்போது தாுமபுரி மாவட்ட துணை செயலாளா் தமிழ்க்குமரன் என்பவாுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவா் இறந்த நிலையில் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர், அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.