
துரின்: இத்தாலியின் துரின் நகரில் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் டென்னிஸ் தரவரிசையில் முதல் 8 இடங்களுக்குள் உள்ள வீரர்கள் கலந்துகொண்டு ரவுண்ட் ராபின் முறையில் விளையாடி வருகின்றனர். இதில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் தனது 2-வது ஆட்டத்தில் அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸுடன் மோதினார்.

