கழுத்தில் ஏற்பட்ட சுளுக்கு காரணமாக கேப்டன் ஷுப்மன் கில் களமிறங்கவில்லை. இதனால் தொடக்க ஆட்டக்காரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் ஆகியோர் களம்புகுந்தனர். முதல் ஓவரிலேயே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ரன் கணக்கை தொடங்காமலேயே ஜெய்ஸ்வால், மார்கோ யான்சன் பந்தில் வீழ்ந்தார். 3-வது ஓவரில் கே.எல்.ராகுலும், மார்கோ யான்சன் பந்தில் ஆட்டமிழந்தார்.
3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வாஷிங்டன் சுந்தரும், துருவ் ஜூரெலும் நிதானமாக விளையாடத் தொடங்கினர். ஆனால் இந்த ஜோடியை ஹார்மர் பிரித்தார். துருவ் ஜூரெல் 34 பந்துகளில் 13 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் வீழ்ந்தார். இதைத் தொடர்ந்து விளையாட வந்த ரிஷப் பந்த், அதிரடியாக விளையாட முயன்று ஹார்மர் பந்தில் அவரிடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 2 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

