முடிவில் இந்திய அணி 62.2 ஓவர்களில் 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. காயம் காரணமாக வெளியேறி இருந்த ஷுப்மன் கில் மீண்டும் பேட் செய்ய களமிறங்கவில்லை. பும்ரா ஒரு ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி ஒரு கட்டத்தில் 75 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து வலுவான நிலையில் இருந்தது. ஆனால் அதன் பின்னர் மேற்கொண்டு 114 ரன்களை சேர்ப்பதற்குள் 8 விக்கெட்களையும் பறிகொடுத்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் சைமன் ஹார்மர் 4, மார்கோ யான்சன் 3 விக்கெட்களை வீழ்த்தினர். கேசவ் மஹாராஜ், கார்பின் போஷ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
30 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோரின் சுழற்பந்து வீச்சில் தடுமாறியது. ரியான் ரிக்கெல்டன் 11, எய்டன் மார்க்ரம் 4, வியான் முல்டர் 11, டோனி டி ஸோர்ஸி 2, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 5, கைல் வெர்ரெய்ன் 9, மார்கோ யான்சன் 13 ரன்களில் நடையை கட்டினர்.

