ஹாம்பர்க்: ஹாம்பர்க் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவு கால் இறுதிச்சுற்றுக்கு பல்கேரிய வீராங்கனை விக்டோரியா டொமாவா முன்னேறியுள்ளார்.
ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் ஹாம்பர்க் டபிள்யூடிஏ டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கால் இறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில் விக்டோரியா டொமாவாவும், ஆஸ்திரேலிய வீராங்கனை அஸ்ட்ரா சர்மாவும் மோதினர். இதில் விக்டோரியா டொமாவா 6-1, 6-1 என்ற நேர் செட்களில் அஸ்ட்ரா சர்மாவை வீழ்த்தி கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
கால் இறுதிச் சுற்றில் விக்டோரியா டொமாவா, பிரான்ஸ் வீராங்கனை லாயிஸ் போய்சனை சந்திக்கிறார்.