ஹாங் காங்: ஹாங் காங் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாட்விக்-ஷிராக் ஜோடி அரை இறுதிக்கு முன்னேறியது.
ஹாங் காங்கில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் ஆரிஃப் ஜுனைடி, ராய் கிங் யாப் ஜோடியை எதிர்த்து விளையாடியது. 64 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சாட்விக்-ஷிராக் ஜோடி 21-14, 20-22, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.
ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 20-ம் நிலை வீரரான இந்தியாவின் லக்ஷயா சென், சகநாட்டைச் சேர்ந்த 31-ம் நிலை வீரரான ஆயுஷ் ஷெட்டியை எதிர்த்து விளையாடினார். இதில் லக்ஷயா சென் 21-16, 17-21, 21-13 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.