Last Updated : 25 Sep, 2025 06:44 AM
Published : 25 Sep 2025 06:44 AM
Last Updated : 25 Sep 2025 06:44 AM

புதுடெல்லி: ஹாக்கி இந்தியா லீக்கின் 7-வது சீசன் ஆடவர் போட்டிக்கான மினி வீரர்கள் ஏலம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் வேதாந்தா கலிங்கா லான்சர்ஸ் அணி ஆஸ்திரேலியாவை சேர்ந்த டிபன்டரான லியாம் ஹென்டர்சனை ரூ.42 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. நெதர்லாந்தை சேர்ந்த டிபன்டரான சாண்டர் டி விஜ்ன்-ஐ தமிழ்நாடு டிராகன்ஸ் அணி ரூ.36 லட்சத்துக்கு வாங்கியது.
யுபி ருத்ராஸ் அணி விலகியதை தொடர்ந்து அந்த அணியை ஹாக்கி இந்தியா லீக்கின் ஆட்சிமன்றக்குழு நிர்வகிக்கிறது. அந்த அணிக்காக ஜெர்மனியை சேர்ந்த தீஸ் பிரின்ஸ் ரூ.36 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இந்திய வீரர்களில் இளம் கோல்கீப்பரான விவேக் லக்ராவை ரூ.23 லட்சத்துக்கு ஷ்ராச்சி ரார் பெங்கால் டைகர்ஸ் ஏலம் எடுத்தது.
யு-21 அணியின் நடுகள வீரரான அட்ரோஹித் ஏக்காவை ரூ.11 லட்சத்துக்கு தமிழ்நாடு டிராகன்ஸ் அணி வாங்கியது. 14 வயதான கேதன் குஷ்வாஹாவை ரூ.2.5 லட்சத்துக்கு பெங்கால் டைகர்ஸ் அணியும், சீனியர் வீரரான ரூபிந்தர் பால் சிங்கை ரூ.12 லட்சத்துககு எஸ்ஜி பைப்பர்ஸ் அணியும் ஏலம் எடுத்தன.
FOLLOW US
தவறவிடாதீர்!