சென்னை: திருவள்ளூர் பிரீமியர் லீக் ஹாக்கி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நேற்று தொடங்கியது. ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஐஒபி 4-1 என்ற கோல் கணக்கில் மாஸ்கோ மேஜிக் அணியை வீழ்த்தியது. ஐஓபி அணி சார்பில் பர்தாஸ் திர்கே 3 கோல்களையும், சுதீப் சிராம்கோ ஒரு கோலும் அடித்தனர்.
‘பி’ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் தெற்கு ரயில்வே ஏஜி அலுவலக அணிகள் மோதின. இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. தெற்கு ரயில்வே தரப்பில் சண்முகமும், ஏஜி அலுவலகம் அணி தரப்பில் வீர தமிழனும் தலா ஒரு கோல் அடித்தனர்.