
சென்னை: ஈஸ்டர்ன் ஸ்லாம் சர்வதேச ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் குவஹாட்டியில் நடைபெற்று வந்தது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சென்னை வடபழநி எஸ்.ஆர்.எம்.ஐ.எஸ்.டி-யில் பி.டெக் முதலாம் ஆண்டு பயின்று வரும் மாணவியான ஷமீனா ரியாஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
இறுதிப் போட்டியில் அவர், போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த அஞ்சலி செம்வாலை 11–9, 13–11, 9–11, 11–4 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.

