அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி, கடந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய ஷெர்பான் ருதர்போர்டை ரூ.2.6 கோடிக்கு வாங்கியுள்ளது. மேற்கு இந்தியத் தீவுகளை சேர்ந்த ஷெர்பான் ருதர்போர்ட், கடந்த சீசனில் 13 ஆட்டங்களில் 291 ரன்கள் எடுத்திருந்தார். இதற்கு முன்பு டெல்லி (2019), மும்பை (2020), பெங்களூரு (2022), கொல்கத்தா (2024) அணியில் அவர் இடம்பெற்றிருந்தார். தற்போது மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அவர் திரும்பி உள்ளார்.
இடது கை பேட்ஸ்மேனான ஷெர்பான் ருதர்போர்ட், மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்காக 44 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். 23 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 397 ரன்கள் எடுத்துள்ளார்.

