லண்டன்: லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் 4-வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் பென் டக்கெட் விக்கெட்டை முகமது சிராஜ் கைப்பற்றினார்.
அப்போது அதை ஆக்ரோஷமாக கொண்டாடிய முகமது சிராஜ், பென் டக்கெட் தோள் பட்டையை இடித்தார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் முகமது சிராஜுக்கு ஒரு தகுதியிழப்பு புள்ளியையும், போட்டியின் ஊதியத்தில் 15 சதவீதத்தையும் அபராதமாக விதித்துள்ளது ஐசிசி.
இந்தப் போட்டியில் சிராஜ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். முதல் இன்னிங்ஸில் ஜேமி ஸ்மித், பிரைடன் கார்ஸ் விக்கெட்களையும், இரண்டாவது இன்னிங்சில் பென் டக்கெட் மற்றும் ஆலி போப் விக்கெட்களையும் சிராஜ் வீழ்த்தினார்.