
விசாகப்பட்டினம்: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணி தனது 4-வது ஆட்டத்தில் நேற்று ஆந்திராவுடன் மோதியது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த தமிழக அணி 74.3 ஓவர்களில் 182 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதிகபட்சமாக வித்யூத் 40, சந்தீப் வாரியர் 29, சோனு யாதவ் 26, பாபா இந்திரஜித் 19, நாராயண் ஜெகதீசன் 19 ரன்கள் சேர்த்தனர். விமல்குமார் 10, பாலசுப்ரமணியம் சச்சின் 4, பிரதோஷ் ரஞ்ஜன் பால் 8, ஆந்த்ரே சித்தார்த் 0, கேப்டன் சாய் கிஷோர் 8, திரிலோக் நாக் 4 ரன்களில் நடையை கட்டினர்.

