சென்னை: எம்சிசி முருகப்பா ஹாக்கிப் போட்டியின் அரை இறுதியில் இந்தியன் ரயில்வேஸ், ஐஓசி அணிகள் மோதவுள்ளன.
சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நாளை (ஜூலை 19) மாலை 4 மணிக்கு இந்த அரை இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள 2-வது அரை இறுதிப் போட்டியில் இந்திய கடற்படை அணியும் (ஐஎன்என்), இந்திய ராணுவ அணியும் (ஐஎன்ஏ) மோதவுள்ளன.
முன்னதாக, நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியம் (ஆர்எஸ்பிபி) அணி 5-2 என்ற கோல் கணக்கில் சாய் என்சிஓசி போபால் அணியை வீழ்த்தியது. மற்றொரு லீக் ஆட்டத்தில் இந்திய கடற்படை அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஐஓசி அணியைத் தோற்கடித்தது.