மான்செஸ்டர்: தனியார் நிறுவன போட்டோஷூட்டுக்காக இந்திய கிரிக்கெட் அணியும், மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து கிளப் அணியும் மான்செஸ்டரில் சந்தித்தன. இரு அணிகளின் வீரர்களும் சங்கமித்த இந்த போட்டோஷூட் தருணம் சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் மூன்று போட்டிகள் நிறைவடைந்துள்ளன. தொடரில் 1-2 என இந்தியா பின்தங்கி உள்ளது. இந்த தொடரின் நான்காவது போட்டி மான்செஸ்டரில் வரும் புதன்கிழமை தொடங்க உள்ளது.
இதற்காக மான்செஸ்டரில் இந்திய கிரிக்கெட் அணி தற்போது பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில்தான், ப்ரீமியர் லீக் கால்பந்து தொடரில் விளையாடி வரும் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து கிளப் அணியை இந்திய அணி போட்டோஷூட்டுக்காக சந்தித்தது.
இதில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில், மான்செஸ்டர் யுனைடெட் அணியின் கேப்டன் புருனோ பெர்னாண்டஸ், இரு அணிகளின் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் என அனைவரும் சந்தித்தனர். அப்போது இரு அணி வீரர்களும் தங்களது ஜெர்ஸியை மாற்றிக் கொண்டனர்.
இந்த சந்திப்பின் போது இரு அணி வீரர்களும் கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாடி மகிழ்ந்தனர். இது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களை மகிழ செய்துள்ளது.
United in Manchester. #TeamIndia | @adidas | @ManUtd pic.twitter.com/zGrIqrcHKG
— BCCI (@BCCI) July 20, 2025